வானத்தில் திடீரென ஏற்பட்ட ஓட்டை- பீதியில் பதறி அடித்து ஓடிய மக்கள்!


ஐக்கிய அரபு அமீரகத்தில் திடீரென வானத்தில் ஓட்டை ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

அந்நாட்டின் அல் அயின் நகரில் நடைபெற்றதாகக் கூறி, ஒரு வீடியோ ஒன்று, சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஞாயிறன்று படம்பிடிக்கப்பட்ட இந்த வீடியோ அல் ஜர்வான் என்பவரால், ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. அல் ஜர்வான், வானிலை ஆய்வாளர் ஆவார்.

அல் அயின் நகரில், அதிகாலையில் ஏற்பட்ட அரிய நிகழ்வு என்று கூறி, அவர் அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, திடீரென மேகங்கள் விலகி, அந்த இடமே பள்ளம் போல தோற்றமளிக்கிறது. வானத்தில் ஓட்டை ஏற்பட்டது போல, இது உள்ளது.

இதைப் பார்த்த பலரும், மறு உலகத்திற்குச் செல்லும் வழி திறந்துள்ளதாகக் கூறி, ஆச்சரியங்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால், இதுபற்றி வானிலை நிபுணர்கள் கூறுகையில், மேகத்தில் உள்ள நீர்த்துளிகளின் வெப்பநிலை உயரும்போது இத்தகைய மாற்றங்கள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது, மழைமேகத்தில் உள்ள நீர் எப்போதும் உறைந்திருக்கும். மழைபெய்யும்போது, அது உருகுவது வழக்கம். சில நேரங்களில், அது உறையாமல் அப்படியே நீர் போல விலகி ஓடுவதால், வானத்தில் ஓட்டை விழுந்தது போல தோன்றியதாக, வானிலை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.-Source: timestamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!