திருமணமானாலும் இப்படிப்பட்ட படங்களிலும் நடிப்பேன் – சாயிஷா அதிரடி..!


தமிழ் சினிமா நட்சத்திரங்களான ஆர்யாவும், சாயிஷாவும் சமீபத்தில் திருமணம் கொண்டுள்ள நிலையில், திருமணத்திற்கு பிறகு சாயிஷா நடிப்பாரா என்ற கேள்விக்கு சாயிஷா ஆமாம் என்று பதில் அளித்துள்ளார்.

வனமகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. பழம்பெரும் நடிகர் திலீப் குமாரின் பேத்தியான இவர், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார்.

சூர்யாவுடன் காப்பான் படத்தில் ஜோடி சேர்ந்த நிலையில் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த வாரம் இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், சாயிஷா சினிமாவில் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


இதுபற்றி அவர் கூறுகையில் ‘ஆர்யாவை கரம் பிடித்ததில் மகிழ்ச்சி. எங்கள் குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கிறோம். தொடர்ந்து நடிப்பது பற்றி முடிவு எடுக்க ஆர்யா முழு உரிமை கொடுத்துவிட்டார். எனவே தொடர்ந்து நடிப்பேன். கதாநாயகர்கள் படம், தனி கதாநாயகி என வித்தியாசம் இல்லாமல் எப்போதும் போல எல்லா படங்களிலும் நடிப்பேன். சமந்தா, ஜோதிகா போன்றோரை இதில் எனக்கு முன்னுதாரணமாக கொண்டுள்ளேன்’. என்றார்.

சக்தி சவுந்தர்ராஜன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்கிறார். ‘டெடி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் கரடி பொம்மை ஒன்று கிராபிக்ஸ் மூலம் நடிக்க உள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க சாயிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!