ஐ.நா.வின் போர்க்குற்ற விசாரணை பற்றி திடீரென பல்டியடித்த இலங்கை அதிபர் சிறிசேனா


இலங்கை ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் நடைபெற்ற இறுதி கட்ட போரில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த இலங்கை அதிபர் சிறிசேனா 2015–ம் ஆண்டு போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று உறுதி கொடுத்தார்.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலும் இலங்கையில் ராணுவமும், விடுதலைப்புலிகளும் இறுதி போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த தீர்மானத்தின் மீது இப்போது நடைபெற உள்ள ஐ.நா. கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் சிறிசேனா தனது அறிவிப்பில் இருந்து திடீர் பல்டி அடித்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘எந்த தலையீடும் இல்லாமல் எங்கள் சொந்த பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு எங்களுக்கு சிலகாலம் தேவை.

ஐ.நா. கூட்டத்தில் வருகிற 22, 23–ந் தேதிகளில் எங்கள் பிரச்சினை வருகிறது. இலங்கைக்கு எதிராக புகார் சொல்பவர்களுக்கு பதில் அளிக்க எங்கள் குழுவை அனுப்ப இருக்கிறோம்’’ என்றார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!