உலககோப்பையில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க முடியாது… நழுவிய ஐசிசி


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க முடியாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாதுகாப்புப் படையினர் வாகனத்தில் சென்றனர். அந்த வாகனத்தின் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் தற்கொலைப்படை தாக்குதலை அரங்கேற்றியது.

அதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தீவிரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலுக்கு ஐநா மற்றும் உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதேபோல் இந்த தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதனை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதனிடையே இந்தாண்டு நடைபெற உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் இந்தியா பங்கேற்க கூடாது, மீறினால் உயிரிழந்த வீரர்களை அவமானம் செய்தது போல் ஆகும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதே கருத்தை முன்னாள் இந்திய வீரர்களும் கூறி வருகின்றனர். இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஐசிசியிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் கோரியது.

அந்த கோரிக்கையை ஐசிசி முமுமையாக நிராகரித்து உள்ளது. உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய ஐசிசி, இரு நாட்டு இடையிலான பிரச்சனையில் தலையிட முடியாது என்றும் தெரிவித்திருக்கிறது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!