பெண்களின் கலாச்சாரத்தை சீரழித்த கேள்விக்குறியாக்கிய… – 90 எம்.எல். விமர்சனம்..!


நடிகர் நடிகர் இல்லை
நடிகை ஓவியா
இயக்குனர் அனிதா உதீப்
இசை சிம்பு
ஓளிப்பதிவு அரவிந்த் கிருஷ்ணா
புதிய அடுக்குமாடி குடியிருப்புக்கு தனது ஆண் நண்பருடன் குடிபெயர்கிறார் ஓவியா. அங்கு ஓவியாவுக்கும், 4 பெண்களுக்கும் இடையே பழக்கம் ஏற்படுகிறது.

கவர்ச்சியாக வலம் வரும் ஓவியாவும் அந்த பெண்களும் நெருங்கிய தோழிகளாகிறார்கள். புகைப்பிடித்தல், மது அருந்துதல் என வாழ்க்கையை அனுபவித்து வரும் ஓவியாவுடன் அந்த 4 பெண்களும் சேர்ந்து அடிக்கும் லூட்டியே 90 எம்.எல். படத்தின் கதை.

ஓவியா இதுவரை நடிக்காத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை எந்தவொரு தயக்கமுமின்றி அப்பட்டமாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.


தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப மாறி வரும் உலகில் ஆண், பெண் என அனைவருமே அதற்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டு எப்படியெல்லாம் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள் என்பது ஓரளவிக்கு அனைவருக்கு தெரிந்திருக்கும். ஆண் நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை ஓரளவுக்கு காட்டியிருக்கும் தமிழ் சினிமா, பெண் தோழிகள் ஒன்று சேர்ந்தால் என்ன செய்வார்கள் என்பதை இதுவரை காட்டியதில்லை. முதல்முறையாக பெண்கள் ஒன்று சேர்ந்தால் நடப்பவற்றை தைரியமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் அனிதா உதுப்.

தமிழிலில் இதுவரை இதுபோன்ற ஒரு படம் வரவில்லை என்று சொல்லும் அளவுக்கு புகைப்பிடித்தல், மது அருந்துதல், முத்தக்காட்சிகள், கவர்ச்சி, ஓரினச்சேர்க்கை என அனைத்தையும் அப்பட்டமாக காட்டியிருக்கிறார்கள். படம் இந்த காலத்து இளைஞர்களை கவர்ந்தாலும், அனைவரையும் கவருமா என்றால் கேள்விக்குறி தான்.


பெண்களை பெருமைப்படுத்தும் பல படங்களுக்கு இடையே இப்படியும் ஒரு படம் என்று சொல்லும் அளவுக்கு படத்தின் திரைக்கதை செல்கிறது. இப்படியும் வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்பதை அறியாத கலாச்சார பெண்கள் இதை பார்த்து மாறாமல் இருந்தால் சரி என்று தான் சொல்ல வேண்டும்.

படத்தை தனது இசையாலேயே நகர்த்துகிறார் சிம்பு. அத்துடன் தனது பாணியில் சிறப்பு தோற்றத்தில் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். பாடல்கள் கேட்கும் ரகம் தான். அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் இளமையாக வந்துள்ளன.

மொத்தத்தில் `90 எம்.எல்.’ குடும்பத்திற்கு ஒத்துவராது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!