எங்களை அடித்தால் திருப்பி அடிக்க தயார் – சூளுரைக்கும் பாகிஸ்தான்- சல்மான் கொடுத்த தைரியமா?


ஒரு நாட்டின் முடி இளவரசரின் வெளிநாட்டு பயணத்தால் என்னவெல்லாம் சர்ச்சைகள் உருவாக முடியுமோ அதை விட அதிக சர்ச்சைகள் சவுதி முடி இளவரசரின் ஆசிய பயணத்தால் நிகழ்ந்து இருக்கிறது.

ஒரு நாட்டின் முடி இளவரசரின் வெளிநாட்டு பயணத்தால் என்னவெல்லாம் சர்ச்சைகள் உருவாக முடியுமோ அதை விட அதிக சர்ச்சைகள் சவுதி முடி இளவரசரின் ஆசிய பயணத்தால் நிகழ்ந்து இருக்கிறது.

உலக அரசியலும் உள்ளூர் அரசியல் போலத்தான், எந்த ஒரு அறிக்கையும், பேட்டியும் காரணம் இல்லாமல் வராது. ஒரு நாட்டின் பிரதமரோ, அதிபரோ வேறு ஒரு நாட்டை பற்றி அறிக்கை விடுகிறார் என்றால் அதற்கு பின் பல அரசியல் முடிவுகள் இருக்கும்.

அப்படி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்ட ஒரு அறிக்கையும், சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மானின் தெற்காசிய பயணமும்தான் தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சவுதி முடி இளவரசர் இம்ரான் கான் தற்போது தெற்காசிய நாடுகளில் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். பாகிஸ்தான், இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு சல்மான் பயணப்படுகிறார். பாகிஸ்தான் சென்ற அவர் அந்நாட்டில் 1.40 லட்சம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் மிகவும் நெருக்கமாக சல்மான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதையடுத்துதான் சல்மான் சென்ற அடுத்த நாளே இம்ரான் கான் அந்த முக்கிய பேட்டியை அளித்தார். புல்வாமா தாக்குதல் குறித்து அமைதி காத்து வந்த இம்ரான், ”இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பில்லை. தேவையில்லால் எங்கள் மீது பழி போடாதீர்கள். இந்தியா எங்கள் மீது தாக்கினால், பாகிஸ்தான் கொஞ்சமும் யோசிக்காமல் திருப்பி தாக்கும்” என்று கூறினார்.

புல்வாமா தாக்குதல் நடந்த பின் பாகிஸ்தான் மிகவும் அமைதியாகவே இருந்தது, இந்த தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என்று மறுத்து வந்தது. இம்ரான் கானும் அமைதியாக இருந்தார். ஆனால் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் இம்ரான் இந்தியாவிற்கு எதிராக அறிக்கைவிட்டு இருக்கிறார். அதோடு போரை தொடங்குவது எளிதான காரியம்தான் என்று கூறினார்.

இதுதான் தற்போது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. பாகிஸ்தானுக்கு தற்போது இந்த தைரியம் வந்தது எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது. சல்மான் வந்து பேசிய பின்தான் பாகிஸ்தான் புதிய நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறது. அப்படியென்றால் சல்மான்தான் பாகிஸ்தானுக்கு இவ்வளவு தைரியம் அளிப்பதா, சவுதிதான் பாகிஸ்தானுக்கு பக்கபலமாக நிற்கிறதா என்று சர்ச்சை எழுந்து உள்ளது.

சல்மான் இன்று பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவில் ஏதாவது பேசுவாரா என்று கேள்விகள் எழுந்துள்ளது. ஆனால் அவர் அப்படி பேச வாய்ப்பு எதுவும் இல்லை. வெறும் ஒப்பந்தம் மட்டும் செய்துவிட்டு, பெரிய அறிக்கை எதுவும் கொடுக்காமல் சென்று விடுவார் என்று கூறுகிறார்கள். அவர் பாகிஸ்தானுக்கு எதிராக எதுவும் பேசவில்லை என்றால் அது இன்னும் பல சந்தேகங்களை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு இடையில் நாளை சல்மான் சீனா வேறு செல்கிறார். இன்று ஒருவேளை பாகிஸ்தானுக்கு எதிராக அவர் எதுவும் பேசாமல், நாளை சீனா சென்று, சீனா அதிபருடன் நெருக்கம் காட்டினார் என்றால் அது இந்தியாவிற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும். சல்மானின் ஒரே ஒரு தெற்காசிய பயணம் ஆசிய நாடுகளுக்கு இடையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!