09.12.2017 இன்றைய ராசிபலன்


மேஷம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். உழைப்பால் உயரும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

மிதுனம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். முகப் பொலிவுக் கூடும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

கடகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. வாகனத்தை இயக்கும் போது அலைபேசியில் பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். தானுண்டு தன் வேலை யுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

சிம்மம்: கணவன்-மனைவிக் குள் விவாதங்கள் வந்து போகும். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். உடன்பிறந்தவர் களால் மனக்கசப்பு வந்து செல்லும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கன்னி: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். பழைய பிரச்னை களை தீர்ப்பீர்கள். நம்பிக்கைக் குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். இனிமையான நாள்.

துலாம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. பிரியமானவர் களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண் பீர்கள். உறவினர்கள் மதிப் பார்கள். எதிர்பார்ப்புள் தடையின்றி முடி யும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

தனுசு: சந்திராஷ்டமம் நீடிப் பதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். சிக்கனம் தேவைப்படும் நாள்.

மகரம்: பிள்ளைகள் பொறுப் பாக நடந்துக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட் கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரி கள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

கும்பம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். மற்றவர்களுக் காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபா ரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தொட்டது துலங்கும் நாள்.

மீனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங் காலம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோ கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக் கும். கனவு நனவாகும் நாள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!