மனைவிக்கு நர்சிங் பணி.. மகனின் படிப்பு செலவு – சிவச்சந்திரன் குடும்பத்திற்கு தமிழிசை ஆறுதல்..!


காஷ்மீரில் பயங்கரவாதி தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 40 பேர் பலியாகினர்.

இதில் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த வீரர் சிவச்சந்திரனும் பலியானார். அவரது உடல் இன்று மாலை அங்கு அடக்கம் செய்யப்படுகிறது.

இந்தநிலையில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை கார்குடி கிராமத்திற்கு வந்து, சிவச்சந்திரன் மனைவி மற்றும் குடும்பத்தினர், உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


சிவச்சந்திரன் குடும்பத்தினருக்கு ஒட்டுமொத்த மக்களும் உறுதுணையாக இருப்போம். சிவச்சந்திரனின் மனைவி காந்திமதி நர்சிங் படித்துள்ளார். எனவே அவருக்கு அந்த துறை சார்ந்த அரசு பணி வழங்க தமிழக அரசை வலியுறுத்துவோம். சிவச்சந்திரன் அவரது மகனை ஐ.பி.எஸ்.ஆக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அதனை தற்போது அவரது மனைவி காந்திமதி நிறைவேற்றுவதாக கூறியுள்ளார். இதற்காக அவரை பாராட்டுகிறேன்.

அவரது மகன் படிப்பு செலவை அரசே ஏற்க வேண்டும். மத்திய அரசு சிவச்சந்திரன் குடும்பத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!