சென்னையில் நிலஅதிர்வு.. பதறியடித்து விசாரித்த மக்கள்..!


சென்னையில் இன்று அதிகாலை லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். வங்கக்கடலில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது. சென்னையில் இருந்து 609 கி.மீட்டர் தொலைவில் வங்கக் கடலில் இந்த நில அதிர்வு மையம் கொண்டு இருந்ததாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

சென்னையின் சில பகுதிகளில் நில அதிர்வை உணர்ந்ததாக பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நில அதிர்வால் எந்தவித உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

அமெரிக்க புவியியல் ஆய்வு அறிக்கையின்படி சென்னையில் இருந்து 609 கி.மீட்டர் தொலைவில் வங்கக் கடலுக்குள் 10 கி.மீட்டர் ஆழத்தில் இந்த அதிர்வு மையம் கொண்டிருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7.02 மணிக்கு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம், வெளியிட்ட அறிவிப்பில் அதிகாலை 1.30, காலை 7.02 ஆகிய இருமுறை வங்கக்கடலில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ரிக்டர் அளவுகோளில் இது 5.1 புள்ளிகளாக பதிவானது என்று கூறப்பட்டுள்ளது. காலையில் அலுவலகத்துக்கு புறப்பட்ட சிலர் இந்த நில அதிர்வை உணர்ந்ததாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்தமான், நிகோபர் தீவுகளில் இதுபோன்று நில அதிர்வு அடிக்கடி ஏற்படுவது உண்டு.

சென்னையில் இருந்து அந்தமான் 794 கடல் மைல் தூரம்(1,470 கி.மீ), தற்போது அந்தமான் அருகே இருந்து, சென்னை அருகே உள்ள கடல் பகுதிக்கு நில அதிர்வு நகர்ந்ததற்கான காரணம் என்ன என்று அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.-Source: tamilmurasu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!