ரஜனி மகளின் விவாகரத்து முதல் டும்… டும்… டும்… வரை…!


நடிகா் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும் தொழிலதிபா் விசாகனின் திருமணத்தில் அரசியல் தலைவர்கள், பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யா அனிமேஷன் படித்து முடித்துவிட்டு, திரைப்படங்களுக்கு டைட்டில் டிசைனராக பணியாற்றி வந்தார். பின்னர் ரஜினியை வைத்து ‘கோச்சடையான்’ மற்றும் தனுஷை வைத்து ‘வேலையில்லா பட்டதாரி 2’ என்ற இரண்டு படங்களை இயக்கியிருந்தார்.

பின்னர் 2010-ல் அஸ்வின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வேத் என்ற மகனும் உள்ளார். இதற்கிடையே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு காரணமாக கடந்த 2017-ல் விவாகரத்துப் பெற்றனர்.

இதனைத்தொடர்ந்து, சவுந்தர்யாவிற்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், என் வாழ்க்கையில் முக்கியமான மூன்று ஆண்கள் உள்ளார்கள். அதில் முதலில் என் தந்தை ரஜினி, இரண்டாவதாக என் மகன் வேத், அடுத்ததாக நான் மணக்க இருக்கும் விசாகன் என அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இவரை மணக்க இருக்கும் விசாகன், மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். மேலும் ‘வஞ்சகர் உலகம்’ என்னும் படத்தில் நடித்துள்ளார்.

இவர்களது திருமணக் கொண்டாட்டங்கள், ஒரு வாரத்திற்க்கு முன்பே தொடங்கிவிட்ட நிலையில் இன்று எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கமல் உட்பட பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களை நேரில் சந்தித்து ரஜினி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கமல்ஹாசன், வைகோ, மு.க.அழகிரி, போன்ற அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

தனுஷ், கஸ்தூரி ராஜா, செல்வராகவன், இசை அமைப்பாளர் அனிருத் உட்பட ரஜினியின் குடும்ப உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் பிரபு, விக்ரம் பிரபு, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டவர்களும், பல சினிமா பிரபலங்களும் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.-Source: eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!