சௌந்தர்யா திருமணத்தில் பெண்கள் ஆடிய கும்மியாட்டம்…. ரசித்து பார்த்த ரஜனி – வைரல் வீடியோ.!


மகளின் திருமணத்தில் பெண்கள் ஆடிய கும்மியாட்டத்தை தனது குடும்பத்தினருடன் அமர்ந்து ரஜினி ரசித்த வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னையின் பிரபல தனியார் ஹோட்டலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகன் வணங்காமுடிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

சவுந்தர்யாவிற்கு இது இரண்டாவது திருமணம் என்பதால், தனது மகனுடன் அவர் அமர்ந்து தாலி கட்டிக் கொண்ட நிகழ்வும் இத்திருமணத்தில் அரங்கேறியுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன், வைகோ, மு.க.அழகிரி, பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

பின்னர், ரஜினியின் குடும்ப முறைப்படி பெண்கள் ஆடிய கும்மியாட்டத்தை தனது குடும்பத்தினருடன் அமர்ந்து ரஜினி ரசித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.-Source: eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!