அந்தரங்க உறுப்பு சின்னதா இருக்குனு கவலைப்படும் ஆண்கள் இத ஒரு முறை படிங்க..!


பாலியல் குறைபாடுகள் என்பது ஆண், பெண் இருவருக்குமே இருக்கும் பிரச்சினை ஆகும். பெரும்பாலும் பாலியல் பிரச்சினைகள் இல்லாதபோது கூட நமது சந்தேகத்தாலும், மனநிலையாலும் நமக்கு பாலியல் குறைபாடு உள்ளதோ என்று தோன்றும். இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு பாலியல் மருத்துவர்களின் உதவியை நாடுவதுதான். நமக்கு உண்மையிலேயே குறைபாடுகள் இருப்பின் மருத்துவர்கள் சிகிச்சை மூலம் அதனை குணப்படுததுவார்கள்.

ஒருவேளை பாலியல் குறைபாடு இல்லாமல் நமது மனநிலை காரணமாக அவ்வாறு தோன்றினால் கவுன்சிலிங் மூலம் நமது குறைபாடுகளை சரிசெயய முயல்வார்கள். எப்படி இருப்பினும் பாலியல் குறைபாடு என்ற பிரச்சினை வந்துவிட்டால் மருத்துவரை அணுகவேண்டியது அவசியம். பாலியல் மருத்துவர்களிடம் நோயாளிகள் கேட்கும் கேள்விகள் பெரும்பாலும் ஒரே மாதிரியான கேள்விகளாகத்தான் இருக்கும். அந்த வகையில் பெரும்பாலும் பாலியல் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவர்களிடம் கேட்கும் பொதுவான கேள்விகள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

கிட்டத்தட்ட அனைத்து நோயாளிகளும் கேட்கும் பொதுவான முதல் கேள்வி இதுதான். உடலுறவு என்பது யாரும் கற்றுத்தர முடியாத ஒன்று. எனவே இந்த கேள்வி அனைவருக்குள்ளும் எழும். நாம் சரியாகத்தான் செயல்படுகிறோமா? இல்லையா? என்று தெரியாததால் நாம் தனிமையில் விடப்பட்டது போல உணருவீர்கள். இதில் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இந்த மனநிலையுடன் இருப்பது நீங்கள் மட்டுமல்ல. உங்களை போல எண்ணற்றவர்கள் இதே குழப்பத்துடன்தான் இருக்கிறார்கள். உங்கள் சந்தேகம் எந்த விதத்திலும் உங்கள் பாலியல் வாழ்க்கையை பாதிக்காமல் பார்த்து கொள்ளுங்கள்.


பாலியல் ஆசைகள் குறைவது என்பது அனைவரும் சந்திக்கும் அடுத்த பிரச்சினையாகும். பெரும்பாலான பெண்களுக்கும், குறிப்பட்ட விகிதத்தில் உயர்ந்து வரும் ஆண்களுக்கும் இந்த பிரச்சினை உள்ளது. இழந்த உங்கள் பாலியல் ஆசையை மீண்டும் பெறுவது உங்கள் கைகளில்தான் உள்ளது. உங்கள் துணையின் அழகையும், வசீகரத்தையும் உறவில் ஈடுபடாத போதும் ரசிக்க கற்றுகொள்ளுங்கள். எப்பொழுதும் அவர்களுடன் விளையாடுவது, கவர்ச்சியான தீண்டல்கள் போன்றவற்றின் மூலம் இந்த பிரச்சினையை எளிதில் சரி செய்துவிடலாம்.

பாலியல் உறவு என்பது இருவரும் உச்சநிலை அடைவது மட்டும்தான் என்று நினைக்காதீர்கள், இது ஒரு கூடுதல் போனஸ்தான். ஆனால் அனைத்து நேரத்திலும் பெண்கள் உச்சநிலையை அடைவதில்லை. அதனால் ஆண்கள் தங்களுக்கு பாலியல் குறைபாடு உள்ளதோ என்று நினைக்க தொடங்குகிறார்கள். இந்த கேள்வியைத்தான் தங்களிடம் அதிகம் கேட்பதாக பாலியல் மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த பிரச்சினையை சமாளிக்க கவர்ச்சியான பேச்சுகளும், முன்விளையாட்டுகளும் அவசியம் என பாலியல் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இது கிட்டத்தட்ட அனைத்து ஆண்களுக்குமே இருக்கும் ஒரு கேள்வியாகும். ஆண்கள் பாலியல் மருத்துவர்களிடம் சென்றால் கேட்கும் முதல் கேள்வி இதுவாகத்தான் இருக்கும். ஆனால் இதற்கு பதில் மிகவும் எளிதானதுதான். ஆணுறுப்பின் அளவு எப்பொழுதும் ஒருவரின் பாலியல் செயல்திறனை தீர்மானிக்காது. ஆண்களுக்கு இந்த கேள்வி வர காரணம் ஆபாசப்படங்களில் வரும் அளவிற்கு ஆணுறுப்பின் அளவு இருந்தால்தான் உறவை முழுமையாக அனுபவிக்க முடியும் என்று தவறாக நினைப்பதுதான். சமீபத்தில் பல ஆண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் சாதாரண நிலையில் 3.61 இன்ச்சும், விறைப்படைந்த நிலையில் 5.16 இன்ச்சும் இருக்கும் ஆணுறுப்பானது பெண்ணை திருப்திபடுத்த போதுமானது என்று கூறப்பட்டுள்ளது.


உறவில் ஈடுபட ஆர்வமாய் இருப்பது என்பது தனிநபர் சார்ந்ததே தவிர பாலினத்தை சார்ந்ததல்ல. என் துணைக்கு ஏன் உறவில் ஈடுபட ஏன் ஆர்வமில்லாமல் போய்விட்டது, என்பது நிறையபேர் கேட்கும் கேள்வியாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். நீண்ட கால உறவில் பாலியல் ஆசைகள் குறைவது என்பது சாதாரணமான ஒன்றுதான் என்று புரிந்துகொள்ளுங்கள். ஆனால் உங்கள் துணை உங்களிடம் இருந்து விலகி இருக்க விரும்பினால் அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டியது அவசியம். பெரும்பாலான பெண்களுக்கு ஹார்மோன் கோளாறுகள், மனஅழுத்தம், வேலைப்பளு, ஒரே சூழ்நிலை போன்றவற்றால் உறவில் நாட்டம் இல்லாமல் இருக்கலாம். இதுபோன்ற உடல் மற்றும் மனம் தொடர்பான பிரச்சினைகளால விருப்பம் குறைந்தால் குணப்படுத்திவிடலாம். ஆனால் உறவு பிரச்சினைகளால் இந்த பிரச்சினை ஏற்பட்டால் அதை வேறுவழியில்தான் கையாள வேண்டும்.

ஆபாசப்படங்களை பார்த்து விட்டு அதில் காட்டும் உறவு முறைதான் சுவாரஸ்யமானது எனவும், நாம் உறவில் ஈடுபடுவது எல்லாம் மிகவும் போரானது என்னும் எண்ணம் பலருக்கும் உள்ளது. இதை அவர்கள் மருத்துவர்களிடமும் அதிகம் கேட்கிறார்கள்.நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய முதல் செய்தி நீங்கள் ஆபாசப்படங்களில் பார்ப்பது எதுவும் உண்மையான உறவு அல்ல. மற்ற திரைப்படங்களை போல்தான் ஆபாசப்படங்களையும் திட்டமிட்டு படம் பிடிக்கிறார்கள். எனவே அதை பார்த்துவிட்டு உங்களை நீங்கள் தாழ்வாக நினைத்து கொள்வது உங்களின் அறியாமையின் வெளிப்பாடே. உறவில் மகிழ்ச்சி என்பது உங்களையும், உங்கள் துணையையும் பொறுத்துதான் இருக்கிறது.


உங்கள் துணையின் மீது நம்பிக்கை இழந்த பிறகு உறவில் சாதாரணமாக ஈடுபடவது என்பது மிகவும் சிக்கலான ஒன்றாகும். தொழிநுட்பம் மிகவும் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் திருமண பந்தத்தை தாண்டி வெளியில் உறவில் ஈடுபடுவதை என்பது மிகவும் அதிகரித்து வருகிறது என்பது கசப்பான உண்மையாகும். தன் துணை தனக்கு துரோகம் செய்ததை அறிந்த பின்னர் சகஜமாக அவர்களுடன் உறவில் ஈடுபட முடியுமா என்பது பலருக்கும் ஒரு கேள்வி ஆகும். ஆனால் மருத்துவர்களிடம் கேட்கும் போது ” நிச்சயம் முடியும் ” என்று கூறுகிறார்கள். அவ்வாறு தவறு செய்தவர்கள் திருந்தி மீண்டும் இணையும்போது அவர்களுக்குள் இருக்கும் நெருக்கமும், நம்பிக்கையும் பன்மடங்கு அதிகரித்திருப்பதை பார்த்ததாக பாலியல் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இந்த கேள்வி ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் வருகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் அடிக்கடி உறவில் ஈடுபட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும் என்ற வதந்தியை இன்றும் நம்பக்கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சொல்லப்போனால் அந்த தகவல் முற்றிலும் பொய். தம்பதிகள் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் உங்கள் காதலை வெளிப்படுத்த உறவில் ஈடுபடுவது என்பது ஒரு வழிதானே தவிர அது மட்டுமே வழியில்லை. எனவே அதிகமாக உறவில் ஈடுபட்டால்தான் காதல் அதிகரிக்கும் என்று நினைக்காதீர்கள். மற்றபடி உங்கள் உடல் எவ்வளவு ஒத்துழைக்கிறதோ அத்தனை முறை நீங்கள் உறவில் ஈடுபடலாம். எந்த பிரச்சினையும் ஏற்படாது.

விறைப்பு மாற்றும் உச்சக்கட்டம் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் உறவில் ஏற்படும் முதன்மையான பிரச்சினை ஆகும். குறிப்பாக இளைஞர்கள் இந்த பிரச்சினையை எண்ணி அதிகம் கவலையும், பதட்டமும் கொள்வார்கள். எனவே இளைஞர்கள் மருத்துவர்களிடம் கேட்கும் முக்கியமான கேள்விகளில் இதுவும் ஒன்றாக உள்ளது. அதற்கு அவர்களின் வாழ்க்கைமுறையும், ஆரோக்கியமில்லாத உணவுமுறையும்தான் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இவற்றை சரிசெய்து மனஅழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலே இந்த பிரச்சினையை குணப்படுத்திவிடலாம் என்று பாலியல் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.-Source: boldsky

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!