அந்த நடிகர் ஒரு சின்ன மாமா.. மீண்டும் கொளுத்திப் போட்ட ஸ்ரீரெட்டி!


பிரபல நடிகரை ஸ்ரீ ரெட்டி வம்புக்கு இழுத்திருப்பது அவரது ரசிகர்களை எரிச்சலை உண்டாக்கியுள்ளது.

அனைவரது முன்னிலையிலும் ஆடையை களைந்து அரை நிர்வாணமாக போராட்டம் நடத்தியவர் ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு திரையுலகை பொறுத்தவரை தயாரிப்பாளரின் பாலியல் சீண்டல்கள் பொறுத்துக்கொண்டு அவர்களை அட்ஜஸ்ட் செய்து கொண்டால் மட்டுமே வாய்ப்பு கிடைப்பதாக பகீர் குற்றச் சாட்டை கூறியிருந்தார்.

இதன் பின்னரும் ஓயாத அவர் பிரபலங்கள் பலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில் அண்மையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான வெங்கடேஷை சின்ன மாமா என ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு அவரது குடும்பத்தை வெறுப்பேற்றியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

வெங்கடேஷ் நடிப்பில் அண்மையில் வெளியான எப் ஃபன் அண்ட் ஃபரஸ்ட்ரேஷன் திரைப்படம் மெகா ஹிட் அடித்து 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. தொடர்ந்து படம் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஸ்ரீ ரெட்டியின் இந்த கருத்தானது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.


குடும்பத்தினர் மீது ஸ்ரீ ரெட்டி குற்றம் சாட்டுவது இது முதல் முறை அல்ல ‌. ஏற்கனவே வெங்கடேஷின் மருமகனான அபிராம் டகுமதி மீது இவர் குற்றம்சாட்டியிருந்தார். தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகனான அபிராம் டகுபதி, தன்னிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக ஸ்ரீரெட்டி கூறியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாகவே தற்போது அவர் வெங்கடேசை வம்புக்கிழுத்து மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். தமிழ்நாட்டில் மட்டும் அல்ல ஆந்திராவிலும் மாமா என்றால் அதற்கான அர்த்தம் பெண் புரோக்கர் என்பது தான்.

எனவே வெங்கடேசை எதற்காக ஸ்ரீரெட்டி மாமா என்று அழைத்தார் என பலரும் குழம்பி போய் உள்ளனர். அதே சமயம் வெங்கடேசின் ரசிகர்கள் ஸ்ரீரெட்டி மீது கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.-Source: timestamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!