இருளிலும் வெள்ளத்திலும் மூழ்கியிருக்கும் அந்த 4 நாட்கள்..? பஞ்சாங்கம் எச்சரிப்பது பலிக்குமா..?


கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக இருந்தே தமிழகத்தில் பருவமழை தொடங்கியது. கடந்த ஒரு மாதமாக வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகள் மழையால் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என கா.வெ.சீதாராமைய்யர் கணித்த வாக்கிய சுபமுகூர்த்த பஞ்சாங்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

அதேபோல் ஒக்கி புயலால் கன்னியாகுமரியும் ராமேஸ்வரமும் எதிர்பாராத வகையில் பெரும் பாதிப்புக்குள்ளாகின.


அதே பஞ்சாங்கத்தில் சென்னை 4 நாட்கள் தண்ணீர் வெள்ளத்தில் மூழ்கும் என்றும் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை நடந்தவை பஞ்சாங்கம் குறிப்பிட்டதுபோல் இருந்ததால், அடுத்ததாக சென்னையும் 4 நாட்கள் பாதிக்கப்படுமா? பஞ்சாங்கத்தில் உள்ளது பலிக்குமா என்ற அச்சத்தில் மக்கள் இருக்கின்றனர்.

குறிப்பாக, டிசம்பர் 9 முதல் 12 ஆம் தேதி வரை சென்னை இருளிலும் வெள்ளத்திலும் மூழ்கியிருக்கும் என்றும் அந்த பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இதனால் இந்த டிசம்பர் எப்போது முடியும்… என்ற பீதியில் மக்கள் இருந்து வருகின்றனர்.-Source:tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!