குடிபோதையில் அண்ணியை கற்பழிக்க முயன்ற தம்பி – குத்திக் கொன்ற அண்ணன்..!


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கோட்டை தெருவைச் சேர்ந்தவர் மேக்களப்பா. இவரது மனைவி பச்சையம்மாள். மேக்களப்பா இறந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. இவர்களுக்கு மாதப்பன் (வயது 35), நாகராஜ் (வயது28) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

மாதப்பன் என்பவருக்கு திருமணமாகி வரலட்சுமி என்ற மனைவி உள்ளார். மாதப்பன் கட்டிட தொழில் செய்து வருகிறார். அவரது தம்பி நாகராஜ் கார்பெண்டர். நாகராஜ்ஜிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி நாகராஜுக்கும், மாதப்பன் மனைவி வரலட்சுமிக்கும் மோதல் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு நாகராஜ் குடித்துவிட்டு வரலட்சுமியின் கையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாதப்பன் இன்று காலை அவரது வீட்டின் அருகிலேயே நாகராஜை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், மாதப்பன் சூளகிரி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இதுகுறித்து சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!