தமிழ்நாட்டோட சார்பா கண்டிப்பா நான் தேர்தலில் நிற்பேன்” – பிக் பாஸ் நித்யா..!


”எங்கப்பா கொடுத்த நல்ல கல்வி இருக்கு. அதனால, நல்ல அறிவும் இருக்கு. ஸோ, இந்தக் கட்சி மூலமா பெண்களுக்கு என்னால உதவி செய்ய முடியும்னு நம்பிக்கை வந்ததுன்னா, தமிழ்நாட்டோட சார்பா கண்டிப்பா நான் தேர்தலில் நிற்பேன்”
‘தேசிய பெண்கள் கட்சி’ என்ற பெயரில் சென்னையில் இன்று , அரசியல் கட்சி ஒன்று லாஞ்ச் ஆகப்போகிறது. பத்திரிகையாளர் அழைப்பில், சிறப்பு அழைப்பாளராக பிக் பாஸ் நித்யா தேஜூ பெயரும் இடம் பெற்றிருந்ததால், அவரிடம் பேசினோம்.

“பெண்கள் இன்னமும் அரசியலுக்கு வர்றதுக்கு பயந்துட்டுதான் இருக்காங்க. ஏன்னா, நிலைமை அப்படித்தான் இருக்கு. அரசியல் சுத்தமா இல்லை. அது, பெண்களுக்கு ஏத்தது இல்லைனு சொல்லிக்கிட்டே இருப்பதைவிட, ஒரு சுத்தமான அரசியலை எப்படிச் செய்யலாம்னு களத்தில் இறங்கி செய்துகாட்டிவிடலாமே என்ற எண்ணத்துலதான், தேசிய பெண்கள் கட்சி என்னை அழைச்சவுடனே ஏத்துக்கிட்டேன்” என்றவர், அக்கட்சியின் நோக்கம் குறித்து பேசத் தொடங்கினார்.

“எங்களோட நோக்கம் பெண் கல்வி, பெண்களுக்கான அதிகாரம் மட்டுமில்லாம, இளம் பெண்களையும் அரசியலில் ஈடுபடுவதற்கு உத்வேகம் தருவதும்தான். இதுக்காக நாங்க ஒரு அரசியல் பள்ளியையும் உருவாக்குற திட்டத்தில் இருக்கோம்.

கிராமப் பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு இருக்கிற ஈக்குவாலிட்டி, நாடாளுமன்றத்தில் இல்லை. அது ஏன்?. அதனால்தான், வட இந்தியாவில் இயங்கிக்கிட்டிருக்கிற ஆல் இண்டியா விமன் பார்ட்டியோட கூட்டணி வைச்சு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 50 சதவிகித தொகுதிகளில் எங்கள் கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது’’ என்றவரிடம், உங்கள் கட்சிப் பெயரின் கீழே ‘பார்ட்டி ஆஃப் மதர்’ என்று கேப்ஷன் ஏன் என்றோம்.

“வாழ்க்கையின் எல்லா அனுபவங்களையும் பெற்று பக்குவமடைஞ்சவங்கன்னா, அது அம்மா என்கிற பெண்தான். அதனாலதான் அப்படி வைச்சிருக்கோம்’’ என்றார். `நீங்களும் தேர்தலில் நிற்பீர்களா?’ என்ற கேள்வியை அவரிடம் முன்வைத்தோம். “எங்கப்பா கொடுத்த நல்ல கல்வி இருக்கு. அதனால நல்ல அறிவும் இருக்கு. ஸோ, இந்தக் கட்சி மூலமா பெண்களுக்கு என்னால உதவி செய்ய முடியும்னு நம்பிக்கை வந்ததுன்னா, தமிழ்நாட்டோட சார்பா கண்டிப்பா நான் தேர்தலில் நிற்பேன்” என்கிறார் உறுதியாக.

பாலாஜி வாழ்த்துகள் சொன்னாரா என்றதற்கு, “அவருக்கு இதுபத்தி எதுவும் தெரியாது’’ என்று முடித்துவிட்டார் நித்யா.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!