ஒரே இரவில் உதட்டை பளபளப்பாக்க 9 வழிகள்… இதப் படிங்க முதல்ல..!


முகத்தின் அழகை மேலும் மெருகூட்டுவது அழகான சிவந்த உதடே என்று சொல்லலாம். உதட்டை எப்போதும் இலஞ்சிவப்பாகவும், பளபளப்பாகவும் வைத்திருப்பதற்கே பெண்கள் விரும்புவார்கள்.

ஆனால் சில நேரங்களில் உதட்டின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டு கற்ய்ப்பு நிறமாக மாறுவதுடன், அது உலர்ந்து வெடிப்புக்கள் ஏற்படவும் செய்கின்றன. இதனால் முகத்தின் அழகும் பாதிப்படைந்து விடும். இதற்கு காரணம் தேநீர், கோப்பி அதிகம் பருகுதல், அதிகளவான சூரிய வெளிச்சத்தால் பாதிப்படைதல் போன்றவையே.

இதிலிருந்து உதட்டை பாதுகாப்பது என்பது தகுந்த பராமரிப்பு வழங்குதல் அவசியம். அதற்காக சந்தையில் உள்ள இரசாயணப் பதார்த்தங்களை பயன்படுத்துவதனால் பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. எனவே இயற்கை முறையில் தீர்வைப் பெறுவதே மிகவும் சரியானது.

1. றோஸ் வாட்டர்.
றோஸ் வாட்டர் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து அதன் நிறத்தை மீட்டுத் தரும். இதனை தினமும் தூங்குவதற்கு முன் 2 அல்லது 3 தடவைகள் பஞ்சினால் தடவி மறுநாள் காலையில் நீரினால் கழுவ வேண்டும்.

அல்லது றோஜா இதழ்களை பாலில் நனைத்து அதனை அரைத்து இரவில் உதட்டில் பூசி மறுநாள் காலையில் நீரினால் கழுவவும்.

2. கற்றாளை.
கற்றாளைச் சாறு உதட்டிற்கு புதுப் பொலிவை பெற்றுத் தரும். தினமும் கற்றாளைச் சாற்றினால் மசாஜ் செய்து வருவது சிறந்தது.

3. சீனி
சுகர் ஸ்கிறப் பயன்படுத்துவதனால் இறந்த கலங்களை இலகுவாக நீக்க முடியும். தினமும் இரவில் சீனியும் நீரும் கலந்து தயாரிக்கப்பட்ட சுகர் ஸ்கிறப்பை பயன்படுத்துவதன் மூலம் தீர்வைப் பெற முடியும்.

4. மாதுளம்பழம்.
மாதுளம்பழம் கறுப்பு உதட்டில் இருந்து உடனடியான தீர்வைத் தருவதுடன் ஈரப்பதத்தையும் வழங்குகின்றது. 1 மேசைக்கரண்டி மாதுளம்பழச்சாற்றுடன் 1 கரண்டி கரட் சாற்றையும் சேர்த்து இரவில் உதட்டில் பூசி, மறுநாள் காலையில் நீரினால் கழுவவும்.

5. பாதம் எண்ணெய்.
பாதாம் எண்ணெய் நிறமாற்றங்களை இலகுவாக சரிசெய்கின்றது. தினமும் இரவில் தூங்குவதற்கு முன் பாதாம் எண்ணெய்யால் உதட்டை மசாஜ் செய்வது சிறந்தது.


6. எலுமிச்சையும் தேனும்.
எலுமிச்சையில் சிட்றஸ் அமிலம் நிறத் திட்டுக்களை போக்குவதுடன், தேன் ஊட்டச்சத்தினையும் ஈரப்பதத்தையும் வழங்குகின்றது. எலுமிச்சை சாற்றுடன் சில துளி தேனைக் கலந்து உதட்டில் பூசி ஒரு மணி நேரத்தின் பின் ஈரத்துணியால் துடைத்து எடுத்துக் கொள்ளவும்.

7. பீற்றூட்.
பீற்றூட் இயற்கையாகவே உதட்டினை இளஞ்சிவப்பாக மாற்றக் கூடியது. பீற்றூட் சாற்றை எடுத்து அதில் 3-4 புதினா இலைகளையும், சில துளிகள் பாதாம் எண்ணெய்யும் சேர்த்து கலந்து கொள்ளவும். அதனை உதட்டில் தினமும் இரு தடவை அல்லது ஒரு தடவை பயன்படுத்துவது சிறந்தது.
8. கிளிசரின்.
கிளிசரின் ஈரத்தன்மையை வழங்கி உதடு உலர்வதை தடுக்கின்றது. இதனைதினமும் இரவில் தூங்குவதற்கு முன் உதட்டில் பூசுவது அவசியமானது.

9. ஆப்பிள் சிடர் விநாகிரி.
ஆப்பிள் சிடர் விநாகிரி இயற்கையாகவே வெண்மையைப் பெற்றுத் தரும் பொருள். இது உதட்டில் உள்ள நிறத் திட்டுக்களை இலகுவாக நீக்கி விடும். ஆப்பிள் சிடர் விநாகிரியுடன் நீர் கலந்து உதட்டில் பூசி 15 நிமிடங்களில் நீரினால் கழுவவும். அமிலத் தன்மை அதிகம் இருப்பதனால் இதனை இரவு முழுவதும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

10. சமையல் சோடா:
சமையல் சோடா இறந்த கலங்களையும் நிறத்திட்டுக்களையும் நீக்குகின்றது. ஒரு தாக்கரண்டி சமையல் சோடாவில் சிறிதளவு நீரை கலந்து பசையாக தயாரித்துக் கொள்ளவும். அதனை உதட்டில் வட்டவடிவில் தடவி 5 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். இதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்வது சிறந்தது.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!