கலீல் அகமதை திட்டிய ‘தல’ தோனி : வைரலாகும் வீடியோ..!


நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ‘கிங்’ கோலியின் சதம், ‘தல’ தோனியின் அபார அரைசதம் காரணமாக இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியின் போது அதிக வெப்பம் காரணமாக ‘தல’ தோனி மயக்கமடையும் சூழல் உருவானது. அப்போது அணியின் மருத்துவர் அவருக்கு சிகிச்சை அளித்தார்.

அதன் பிறகு ஓவர்களுக்கு இடையே ‘தல’ தோனி, கார்த்திக்கிற்கு, கலீல் அகமது குடிக்க தண்ணீர் எடுத்து சென்றுள்ளார். அப்போது மைதானத்தின் பிட்ச் மீது கலீல் அகமது நடந்து சென்றதால் பிட்ச் மீது நடந்து வரலாமா?, சுத்தி வரவேண்டியது தானே என ‘தல’ தோனி அவரை கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.-Source: dina.seithigal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!