தமிழகத்தில் குளிர் இப்போது குறையாது.. எச்சரிக்கும் சென்னை வானிலை மையம்!


தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும், இதனால் குளிர் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மக்கள் கடந்த சில நாட்களாக அதிக அளவில் குளிரை சந்தித்து இருக்கலாம். கடந்த இரண்டு வாரமாக மிக அதிக அளவில் குளிரான வானிலை நிலவி வந்தது.

சில இடங்களில் வெப்பநிலை 10 டிகிரி செல்ஸியஸை விட குறைவாக சென்றது. இது தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்து இருக்கிறது.

சென்னையில் கடந்த வாரம் வெப்பநிலை 13 டிகிரி செல்ஸியஸ் வரை குறைந்தது. ஊட்டி மற்றும் கொடைக்கானலில் மிக மோசமாக வெப்பநிலை குறைந்தது. ஊட்டி, கொடைக்கானலில் 0 டிகிரி செல்ஸியஸை தொட்டது.

அதிகாலையில் மிக அதிக அளவில் குளிர் நிலவி வந்தது. இந்த குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. பொங்கல் வரை இந்த குளிர் நீடிக்கும் என்று என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் குளிர் இன்னும் குறையும் என்று கூறியுள்ளனர். வெப்பநிலை 10 டிகிரிக்கு குறைவாக செல்ல வாய்ப்புள்ளது என்றுள்ளனர்.

சர்வதேச அளவில் ஏற்படும் வானிலை மாற்றம் இதற்கு காரணம் என்று கூறியுள்ளனர். தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பனி அதிகம் ஆகும், பனி அதிகம் ஆவதால் குளிரும் அதிகம் ஆகும் என்று கூறியுள்ளனர்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!