மோசமான முதல்வர் இவர் தானாம் – கூகுளில் வெளியான தகவலால் சர்ச்சை..!


சர்வதேச அளவில் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள கூகுள் இணைய தளத்தைத்தான் அதிகம் பேர் பயன்படுத்துகிறார்கள்.

இதற்காக கூகுள் இணைய தளம் புதுப்புது தகவல்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் மோசமான மாநில முதல்வர் யார்? என்று தேடினால் அதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பெயர் வருகிறது.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கு அய்யப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கேரளாவில் வன்முறை, கலவரங்கள் நடக்கிறது. இதனை சமூக ஆர்வலர்கள் உள்பட பலரும் விமர்சித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவின் மோசமான முதல்வர் என பினராயி விஜயனின் பெயர் கூகுள் இணைய தளத்தில் வெளியாகி இருப்பது கேரள அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதற்கு எதிர்கட்சிகளின் சதியே காரணம் என்றும், பினராயி விஜயனின் நற்பெயரை சீர் குலைக்க செய்யப்படும் திட்டமிட்ட செயல் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

கூகுள் இணையதளம் பினராயி விஜயனின் பெயரை மோசமான முதல்வர் என்று குறிப்பிட்டு இருப்பது இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கூகுள் இணையதளம் சர்ச்சையில் சிக்குவது இதற்கு முன்பும் பல முறை நடந்து உள்ளது. கூகுளில் முட்டாள் யார்? என தேடினால் அதில் அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயர் வந்தது. இது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக கூகுளின் முதன்மை அதிகாரியை அமெரிக்க பாராளுமன்றம் நேரில் அழைத்து விசாரணை நடத்தியது.

இது போல உலகின் டாப் 10 கிரிமினல்கள் யார்? என தேடினால் அதில் தாவூத்இப்ராகிம், கடாபி ஆகியோருடன் இந்திய பிரதமர் மோடியின் படமும் இடம் பெற்றது. இதுவும் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!