தமிழக இளைஞர் புனேவில் கொலையா? – உறவினர்கள் சாலை மறியல்!

கடலூர் மாவட்டம் இறையூர் கிராமத்தைச் சேர்ந்த பரந்தாமன், மதுரை மாவட்டம் முத்தையன்பட்டியைச் சேர்ந்து சிவானி ஆகிய இருவரும் காதலித்து கடந்த ஒரு ஆண்டு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். பின்னர் பெண்ணுக்கு திருமண வயது பூர்த்தியாகவில்லை என்று கூறி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட பரந்தாமன் நிபந்தனை ஜாமினில் டிசம்பர் 26ம் தேதி வெளிவந்து மதுரை சிந்துப்பட்டி காவல்நிலையத்தில் கையெழுத்துப் போட்டு வந்தார் .

பரந்தாமன்

இந்தநிலையில் அவர் நேற்று புனே ராம் நகர் லாட்ஜில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் உறவினர்கள் சந்தேகமடைந்துள்ளனர். 8வது நாளாக கடந்த வியாழக்கிழமை சிந்துப்பட்டி காவல்நிலையத்தில் கையெழுத்திட்ட பரந்தாமன் ஒரே நாளில் புனே சென்று எப்படி தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்பது உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். புனேவில் மர்மமான முறையில் இறந்துகிடந்த நிலையில் அது ஆணவக்கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. சிவானியின் குடும்பத்தினர் புனேவில் பலகாரக் கடை நடத்தி வருவதாகவும், நல்ல வசதி படைத்த அவர்கள் பரந்தாமனை கடத்திச் சென்று கொன்றிருக்கலாம் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி இருக்கின்றனர். விசாரணைக்கு உட்படுத்தும் வரை உடலை வாங்கப் போவதில்லை என்று அவர்கள் கூறியிருக்கின்றனர்.

பரந்தாமன்

பரந்தாரமன் உறவினர்கள் விருத்தாசலம்& திட்டக்குடி சாலையில் இறையூர் கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையில் புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் நீண்ட நேரம் நடந்த சாலை மறியல் கைவிடப்பட்டது, நாளை உடலை வாங்க அவரது பெற்றோர்கள் புனே செல்ல இருப்பதாகத் தெரிவித்தனர். – Source: vikatan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.