காதலனுக்கு கொடுத்த பரிசால் காதலிக்கு மரண தண்டனை… என்ன பரிசு தெரியுமா?


பாகிஸ்தானில் தன்னை காதலித்து கைவிட்ட வாலிபர் மீது ஆசிட் வீசி கொன்ற வழக்கில் 20 வயது பெண்ணுக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்துக்குட்பட்ட முல்தான் மாவட்டத்தை சேர்ந்த ஷம்ரியா(20) என்ற பெண்ணை உயிருக்குயிராக காதலித்துவந்த சதகத் அலி(23) என்பவர் பின்னர் ஷம்ரியாவை கைவிட்டு வேறொரு நபருடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்தார்.

இதனால், ஆத்திரமடைந்த ஷம்ரியா சதகத் அலி வேறொரு பெண்ணை திருமணம் செய்யாமல் இருக்கும் வகையில் அவருக்கு தக்கதொரு பாடம் கற்பிக்க திட்டமிட்டார்.


கடந்த ஆண்டு சதகத் அலியை தனது வீட்டுக்கு வரவழைத்த ஷம்ரியா மறைத்து வைத்திருந்த ஆசிட்டை அவர்மீது திடீரென்று வீசினார். இதனால் ஏற்பட்ட தீக்காயங்களால் சிகிச்சி பலனின்றி சதகத் அலி உயிரிழந்தார்.

இதையடுத்து, ஷம்ரியாவை கைது செய்த போலீசார் அவர் மீது முல்தான் மாவட்டத்தில் உள்ள தீவிரவாத நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

பாகிஸ்தான் நாட்டின் நீதிமன்ற வரலாற்றில் ஆசிட் வீச்சு சம்பவத்தில் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. – Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!