2 நிமிடங்களில் ரூ.63 கோடி வென்ற ஓய்வு பெற்ற குத்துச்சண்டை வீரர்..!


2019 ஆம் ஆண்டு புத்தாண்டையொட்டி, ஜப்பானில் கண்காட்சி குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் ஓய்வு பெற்ற பிரபல குத்துச்சண்டை வீரர் பிளாய்ட் மேவெதர் பங்கேற்றார். ஜப்பானை சேர்ந்த அனுபவமற்ற கிக்-பாக்சிங் வீரரான நாசுகாவா (20) என்பவரை எதிர்கொண்டார். விளம்பர ரீதியான கண்காட்சி போட்டியாக, ஜப்பானின் ரிஜின் நிறுவனம் இதனை நடத்தியது.

மொத்தம் 9 நிமிடங்களை கொண்ட இந்த போட்டி, ஒவ்வொரு சுற்றுக்கும் 3 நிமிடங்கள் என்கிற அடிப்படையில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தொடங்கிய இந்த போட்டியில் பிளாய்ட் மேவெதர் 139 வினாடிகளிலேயே எதிர் வீரரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இதன் மூலம் அவருக்கு 9 மில்லியன் டாலர்கள்( ரூ.62,70,75,000) பரிசாக அளிக்கப்பட்டது. பணத்திற்காக பிளாய்ட் மேவெதர் இந்த போட்டியை ஒப்புக்கொண்டார் என்றும், இதனால் அவருக்கு எந்த பெருமையும் இல்லை என்றும் சிலர் கருத்து கூறி வருகின்றனர். ஆனால் தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் இதுவரை தோல்வியே காணாத பிளாய்ட் மேவெதர், 50 போட்டிகளில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!