5000 கோடி சொத்தையும் ஏழைகளுக்கு தானம் செய்யும் பிரபல நடிகர்..!


தன்னுடைய சொத்து முழுவதையும் தானமாக எழுதி வைப்பதாகக் கூறி, வியக்கவைத்திருக்கிறார் பிரபல ஹாலிவுட் நடிகர் சவ் யுன் ஃபேட்.

ஹாங்காங்கை சேர்ந்த இவரது படங்கள், அதிரடி சண்டைக் காட்சிகளுக்கு பெயர்போனவை. ஏ பெட்டர் டுமாரோ உள்ளிட்ட பல படங்கள் மிகவும் பிரபலமானவை. தமிழில் `பாயும் புலி, பதுங்கும் நாகம்’ உட்பட இவரது பல படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ளன.

62 வயதாகும் நடிகர் சவ் யுன் நடிகர் சவ் யுன், `த கிவ்விங் ப்ளட்ஜ்’ (‘The Giving Pledge’) என்ற ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளார். ஏழைகளுக்கு உதவும் எண்ணம் கொண்ட பணக்காரர்களுக்கான அமைப்பு, `த கிவ்விங் ப்ளட்ஜ்’ ஆகும். . 2010-ம் ஆண்டு பில்கேட்ஸ் மற்றும் வாரன் பஃப்பட் ஆகியோர் இந்த இயக்கத்தைத் துவங்கினர். . இதில் மொத்தம் 186 பேர் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். அந்தவகையில் நடிகர் சல் யுன் ஃபேட்டும் தற்போது தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறார்.

வருடம்தோறும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பெயர் பட்டியலை வெளியிடும். அப்படி 2015-ம் வருடம் வெளியான பட்டியலில் சவ் யுன் ஃபேட் இடம்பிடித்திருந்தார்.

இந்த நிலையில் தனது ஐயாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அனைத்தையும் ஏழைகளுக்கு தானமாக அளிப்பதாக அறிவித்திருக்கிறார் நடிகர் சல் யுன் ஃபேட். இதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளார்.

இது குறித்து அவரது மனைவி ஜாஸ்மின் டன், ‘என் கணவர் எப்போதும் எளிமையான வாழ்க்கையே வாழா்ந்து வந்தார். சாலையோர உணவகங்களில் அதிகமாக சாப்பிடுவார். அதிலும் , எளிமையான சாப்பாட்டையே விரும்புவார்’ என்றார்.

சல் யுன் ஃபேட், ‘இந்த பணத்தை எப்போதும் நாம் வைத்திருக்க முடியாது. இறப்பிற்கு பின் அந்த சொத்துகளை கொண்டு செல்ல முடியாது. ஒரு நாள் மரணமடைந்துவிட்டால், அதை மற்றவர்கள் பயன்படுத்த கொடுக்க வேண்டும். அதைதான் செய்கிறேன். என் இறப்பிற்கு பின் சொத்துக்களை தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்க இருக்கிறேன். இந்த உலகில் எதும் நிரந்தரமானதல்ல. இங்கு எதையும் நிரந்தரமாக வைத்துக்கொண்டிருக்க முடியாது என்று என் குரு கூறுவார்’ என்று தெரிவித்துள்ளார்.-Source: patrikai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!