ராம பக்தரான அனுமன் ஒரு விளையாட்டு வீரர் – மந்திரி பேச்சால் மீண்டும் சர்ச்சை..!


உத்தர பிரதேச விளையாட்டு துறை மந்திரி மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரான சேத்தன் சவுகான் அம்ரோஹா நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அதில் அவர் பேசும்பொழுது, அனுமன்ஜி ஒரு கடவுள். அவரை கடவுளாக நான் வழிபடுகிறேன். நான் ஒரு விளையாட்டு வீரன். அனைத்து விளையாட்டு வீரர்களும் சக்தியை வழிபடுவார்கள். அனுமன்ஜி சக்தி மற்றும் வலிமையின் ஓர் அடையாளம். அவர் மல்யுத்தம் செய்பவர். விளையாட்டு வீரராகவும் இருந்துள்ளார். அதனால் மல்யுத்த வீரர்கள் அனைவரும் அவரை வழிபடுவார்கள் என கூறியுள்ளார்.

அதன்பின் அவர் பேசும்பொழுது, கடவுள்கள் மற்றும் முனிவர்களில் சாதி என்பது கிடையாது. இதேபோன்று அனுமன்ஜி எனக்கு கடவுள். சாதி வழியே அவரை பிரிப்பதற்கு நான் விரும்பவில்லை என கூறியுள்ளார்.

உத்தர பிரதேச முதல் மந்திரி ஆதித்யநாத் ஆல்வாரில் நடந்த பேரணி ஒன்றில், அனுமன் வனவாசி என்றும் ஒரு தலித் என்றும் கூறினார். அனைத்து இந்திய சமூகத்தினரை இணைக்க பணியாற்றியவர் என்றும் அவர் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அவரை தொடர்ந்து அவரது அமைச்சரவையின் மந்திரியான நாராயண், அனுமன் ஜாட் சமூகத்தினை சேர்ந்தவர் என கூறினார். அக்கட்சியின் எம்.எல்.ஏ.வான புக்கல், அனுமன் ஒரு முஸ்லிம் என கூறினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், அனுமனை ஒரு விளையாட்டு வீரர் என சவுகான் கூறியுள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!