ஞாபகசக்தி அதிகம் கொண்ட மிதுன ராசிகர்களுக்கு இந்த புத்தாண்டு எப்படி..?


குரு பகவானின் ஆதிக்கத்தில் பிறக்கும் ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்கத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சந்தேகத்தால் கணவன் – மனைவிக்கிடையில் பிரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நிகழும் விளம்பி வருடம், மார்கழி மாதம் 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை, நள்ளிரவு 12 மணிக்கு குரு பகவானின் ஆதிக்கத்தில் ஆங்கிலப் புத்தாண்டு (2019) பிறக்கிறது. எண் கணித ஜோதிடப்படி 2019ன் கூட்டுத்தொகை (2+0+1+9=12,1+2=3). குரு பகவானின் ஆதிக்கம் என்பதால், இந்த ஆண்டு பணப்புழக்கம் அதிகரிக்கும். அந்த வகையில், மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த புது வருடம் எப்படி இருக்கப் போகிறது என்று இங்கு பார்ப்போம்.

ஞாபகசக்தி அதிகம் கொண்ட மிதுன ராசிகர்களுக்கு புத்தாண்டு சாதக, பாதகங்கள் சம அளவு கலந்ததாகவே இருக்கும். அடிக்கடி நோய்களால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். பண விஷயத்தில் நம்பியவர்களே மோசம் செய்யக்கூடும். சக பணியாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. மூன்று மாதம் வரை புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். வெளிநாட்டு தொழில் வியாபாரத்தில் அனுகூலங்கள் உண்டாகும்.


பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிரிக்கட்சியினருக்கு பணிந்து செல்லும் சூழ்நிலை ஏற்படும். விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் ஏற்படும். கலைத்துறையினர் கிடைக்கும் வாய்ப்பை, பயன்படுத்திக்கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் சில காலம் மந்த நிலையை அடைந்தாலும், பின் சிறந்து விளங்குவார்கள்.

வருடம் முழுவதும் சனி 7ல் கண்டகச் சனியாக இருப்பதால், கணவன் – மனைவிக்கிடையே சின்ன சின்ன பிரச்சனை ஏற்பட்டு சந்தேகத்தின் அடிப்படையில் பிரிவு ஏற்படும். பணப்பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும். பொருள்கள் களவு போக நேரிடும். வாழ்க்கைத் துணைக்கு அடிக்கடி மருத்துவச்செலவுகள் வந்து கொண்டே இருக்கும்.

பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். நண்பர்கள் வீட்டு விஷேசங்களை முன்னின்று நடத்துவீர்கள். மொத்தத்தில் இந்த புது வருடம் உங்களது நீண்டகால விருப்பங்களை நிறைவேற்றுவதுடன் மன அமைதியைத் தருவதாகவும் இருக்கும்.-Source: samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!