யுவராஜ் சிங்கை அடிப்படை விலைக்கே வாங்கிய மும்பை இந்தியன்ஸ் – எதனால் தெரியுமா..?


ஐபிஎல் வீரர்கள் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று மதியம் 3.30 மணியில் இருந்து இரவு 8.40 மணி வரை நடைபெற்றது. இதில அதிகபட்சமாக உனத்கட், வருண் சக்கரவர்த்தி 8.4 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார்கள்.

ஸ்டெயின், மெக்கல்லம் போன்ற முன்னணி வீரர்கள் ஏலம் போகவில்லை. யுவராஜ் சிங்கின் அடிப்படை விலை ஒரு கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. முதல் சுற்றில் எந்த அணியும் அவரை வாங்கவில்லை. விலைபோகாத வீரர்கள் 2-வது சுற்றில் ஏலம் விடப்பட்டார்கள். அப்போது மும்பை இந்தியன்ஸ் அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கே ஏலம் எடுத்தது.

அதேபோல் நியூசிலாந்து பேட்ஸ்மேன் மார்ட்டின் கப்திலை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!