அமேசானில் ஒன்றல்ல, இரண்டல்ல; ஏராளமாக ஆர்டர் செய்த குறும்புக்கார கிளி!


இங்கிலாந்து நாட்டில் தேசிய விலங்குகள் நல வாரிய சரணாலயம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு ”ராக்கோ” என்ற கிளி ஒன்று இருந்தது. இது தனது மோசமான நடத்தையால், பார்வையாளர்களுக்கு பெரும் தொந்தரவாக இருந்து வந்தது.

இதையடுத்து அங்கு வேலை செய்யும் மரியோன் விஸ்ச்நியூஸ்கி என்பவர், ”ராக்கோ” கிளியை ஆக்ஸ்போர்டுஷைரில் உள்ள தனது வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். அவரது வீட்டில் ஏராளமான பறவைகள் ஏற்கனவே இருந்தன.

அவற்றுடன் ராக்கோ விரைவில் நட்பாக பழக ஆரம்பித்துள்ளது. இதையடுத்து மரியோனின் உதவியுடன் பல்வேறு குரல்களில் பேசவும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அவர் கற்றுக் கொடுத்த விஷயங்கள் மூலம், அமேசானில் சில பொருட்களை ஆர்டரும் செய்துள்ளது.

இதுகுறித்து சண்டே டைம்ஸ் ரிப்போர்ட் கூறுகையில், மரியோனின் அமேசான் கணக்கில் “ராக்கோ” கிளி சில பொருட்களை ஆர்டர் செய்தது உண்மை தான். ஆனால் அவர் தனது கணக்கிற்கு பேரண்டல் லாக் போட்டிருந்ததால், ஆர்டர்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன.

அதுமட்டுமல்லாமல், அமேசானின் அலெக்சா ஸ்பீக்கரை தன் பேச்சு மூலம் கட்டுப்படுத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இசை அல்லது பாடல்களை பிளே செய்வது, ஜோக்குகளை பிளே செய்வது என அட்டகாசம் செய்து வருகிறது.

இதுபோன்ற செயல்பாடுகளினால் இங்கிலாந்தில் ”ராக்கோ” கிளி மிகப் பிரபலம் என்று கூறப்படுகிறது.-Source: samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!