போட்டியில் ஜடேஜாவை சேர்க்காதது பெரிய தவறு – வாகன், கவாஸ்கர் கருத்து..!!


பெர்த்தில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது.

ஆடுகளம் வேகப்பந்துக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்தது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் விகாரி 2 விக்கெட் வீழ்த்தினார். இதனால் முதன்மை சுழற்பந்து வீச்சாளரை அணியில் சேர்த்து இருக்கலாம் என்று கருத்து எழுந்துள்ளது.


இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியதாவது:-

அணியில் ஜடேஜாவை சேர்க்காதது மிகப்பெரிய தவறு. அடுத்து சில நாட்களில் சுழற்பந்து வீச்சாளரை சேர்க்காதது பற்றி கோலி நிச்சயம் சிந்திப்பார் என்றார்.


இந்திய முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறும்போது,

அஸ்வின் காயம் அடையாமல் இருந்தால் கண்டிப்பாக அணியில் இடம் பெற்று இருப்பார். ஒரு சுழற்பந்து வீச்சாளரை சேர்க்காதது தவறு. ஜடேஜா கூட பந்தை சுழற்றுவார். 4-வது நாளில் பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாடுவது கடினமானது என்றார்.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!