200,000 பவுண்டுகள் தொகையை இழந்த பிரித்தானிய பெண் – அதிர்ச்சியில் மக்கள்!


பிரித்தானியாவில் நபர் ஒருவர் லாட்டரியில் வென்ற 200,000 பவுண்டுகள் தொகையை அந்த நிறுவனம் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியரான 57 வயது ஏஞ்சலா மேசன் என்பவரே லாட்டரியில் வென்ற 200,000 பவுண்டுகள் தொகையை குறித்த நிறுவனம் ஏமாற்றியதாக குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் ஏஞ்சலா வாங்கிய 3 பவுண்டுகளுக்கான லாட்டரியில் அவருக்கு 200,000 பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது.

தனது வாழ்க்கையை இந்த தொகை மாற்றும் என கருதிய அவருக்கு அந்த லாட்டரி நிறுவனத்தின் பதில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லொட்டரியில் தமக்கு பரிசு விழுந்துள்ளது என்ற தகவலே தனது தூக்கத்தை தொலைக்க வைத்தது என கூறும் ஏஞ்சலா,

இதுவரை தமது வாழ்க்கையில் இந்த அளவுக்கு பெரிய தொகை பரிசாக கிடைத்ததில்லை என்பதால் பல கனவுகள் கண்முன் தெரிந்தது என்றார். முதன் முதலில் எனது நினைவு வந்தது குடியிருப்புக்கான கட்டணம் மொத்தம் செலுத்திவிடலாம், இனி கடனே இல்லாமல் வாழலாம் என்பதே.

அடுத்த நாள் காலை தமது லாட்டரி குறித்து தொடர்புடைய நிறுவனத்திடம் சென்று விசாரித்ததும், ஏஞ்சலா அதிர்ந்து போயுள்ளார்.

வெற்றிபெற்ற எண்களை அவர்கள் பரிசோதித்தபோது அது செல்லாத எண்கள் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அந்த நிறுவன அதிகாரிகளுக்கு ஏஞ்சலா மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். 5 நாட்களுக்கு பின்னர் வந்த பதிலில், அந்த லாட்டரியை தவறாக பயன்படுத்தியிருக்கலாம் எனவும், அதனால் அந்த லொட்டரி அட்டை சேதமடைந்திருக்கலாம் எனவும் பதில் அளித்துள்ளனர்.

இதே நிலை தான் எரிக் வாக்கர் என்ற பிரித்தானியருக்கும் ஏற்பட்டுள்ளது. அவரும் இதுபோன்ற லாட்டரியில் 200,000 பவுண்டுகள் வெற்றிபெற்றும் இறுதியில் அந்த பணம் கைக்கு எட்டாமல் உள்ளது.

தற்சமயம் போலீஸ் விசாரணையில் உள்ளது அந்த வழக்கு.-source: dina.seithigal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!