சுகபிரசவத்தில் 5¼ கிலோ எடையில் பிறந்த ஆண் குழந்தை… எங்கு தெரியுமா..?


சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் இந்திரேஷ்குமார் குப்தா. இவரது மனைவி ஜெயஸ்ரீ (வயது 30). இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்தநிலையில் ஜெயஸ்ரீ மீண்டும் கர்ப்பம் தரித்தார். நிறைமாத கர்ப்பமாக இருந்த ஜெயஸ்ரீ பிரசவத்துக்காக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ஜெயஸ்ரீயின் வயிறு இயல்பை விட பெரியதாக இருந்ததால் அவரை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்தனர். இந்தநிலையில் ஜெயஸ்ரீக்கு சுகபிரசவத்தில் அழகான ஆண்குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை 5 கிலோ 200 கிராம் இருந்தது. எடை அதிகம் இருந்ததால் குழந்தையை தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

கஸ்தூரிபா காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நடந்த பிரசவங்களில் அதிக எடையுடன் பிறந்த குழந்தை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் விஜயா கூறுகையில், “கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆஸ்பத்திரியில் 4.8 கிலோ எடையில் பிறந்த குழந்தையே அதிக எடை கொண்ட குழந்தையாக கருதப்பட்டது.

அது தற்போது முறியடிக்கப்பட்டு இருக்கிறது. அதிக எடையுடன் பிறந்ததால் குழந்தையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மேலும் சில ஆண்டுகள் அக்குழந்தையின் உடல் வளர்ச்சி குறித்து ஆராய்வோம். இந்த சவாலான பிரசவத்தில் டாக்டர்கள் வித்யா, சுகன்யாதேவி, சத்யமூர்த்தி ஆகியோரின் பங்கு முக்கியமானது. தாயும், சேயும் தற்போது நலமாக இருக்கிறார்கள்”, என்றார்.-source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!