மட்டக்களப்பு – பாம்புகள் கரை வலையில் அகப்பட்டதற்கான உண்மைக் காரணம் இதுதானாம்…!


மட்டக்களப்பு மாவட்டம் நாவலடியில் கரை வலை தொழிலில் ஈடுபட்டு அனைத்து மீனவர்கள் வலையிலும் சுமார் ஒரு டன் எடையில் கடல் பாம்புகள் சிக்கி உள்ள சம்பவம் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

இதுபோன்று கடந்த சுனாமி பேரலை ஏற்பட்ட காலத்திலும் பெருமளவான பாம்புகள் மட்டக்களப்பு பகுதியில் படையெடுத்ததால் தற்போது மக்கள் மத்தியில் இன்று அச்சநிலையேற்பட்டுள்ளது.


அதிகளவிலான பாம்புகள் ஏன் பிடிபடுகின்றன என்பது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடல் பாம்புகள் திறந்த கடல் பரப்புகளில் வாழக்கூடியவை, கடலின் மேற்பரப்பில் நீந்தும் பழக்கம் உள்ளவை, கடலின் மேல் பரப்பில் அசையாமல் மிதந்தபடியே தனது நிழலில் ஒதுங்க வரும் மீனை இது ஏமாற்றி உண்ண கூடிய பழக்கம் கொண்டவை


தரையில் வாழும் பாம்புகளை விட 10 மடங்கு மிகக் கொடிய விஷத்தை கக்கும் திறன் கொண்டவை கடல் பாம்புகள்.

இதனால் வலையில் சிக்கும் கடல் பாம்புகளை மீனவர்கள் மிக கவனமாக வலையில் இருந்து அகற்றி மீண்டும் கடலில் தூக்கிபோடுவார்கள். கடல் பாம்புகள் அனைத்துமே நுரையீரல் மூலம் சுவாசிக்கக் கூடியவை.


மூச்சுவிட குறிப்பிட்ட நிமிட இடைவெளிக்கு ஒரு முறை கடல்மட்டத்துக்கு மேலே வந்து சுவாசிக்க வேண்டிய அவசியம் அவற்றிற்கு உண்டு இதனால் கடல் பாம்புகளை நீரை விட்டு சற்று நேரம் தூக்கிப் பிடித்தால் மூச்சு திணறி இறந்துவிடும்.

ஆனால் தற்போது டன் கணக்கில் கரை ஒதுங்கியுள்ளது, சந்தேகிக்க வைக்கிறது. பலர் இதனை இனபெருக்க காலத்தில் கரை ஒதுங்குவது வழக்கம் என கூறுகின்றனர். ஆனால் அரசு தான் ஆராய்ச்சி செய்து முறையான அறிவிப்பை வெளிவிட வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!