தமிழுக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டு பாலிவுட் படத்துக்கு தாவிய குறளரசன்!


சிம்பு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் குறளரசன். இவர் தமிழ் திரை உலகின் அஷ்டாவதானி என்று அழைக்கப்படும் டி. ராஜேந்தரின் இளைய மகன் ஆவார்.

இசை அமைப்பதில் வல்லவரான குறளரசன், தற்போது ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஐந்து பாடல்கள் அடங்கிய ஆங்கிலப் பாடல் தொகுப்பினை ஹாலிவுட் பாடகர்களை பாட செய்து நியூயார்க் நகரில் தன் ஆல்பத்தை சமீபத்தில் அவர் வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து, தற்போது முப்பதிற்கும் மேற்பட்ட ஹிந்தி பாடல்களை ஆல்பமாக வெளியிட்டுள்ளார். இந்த பாடல்களை கேட்ட பாலிவுட் படங்களை தயாரிக்கும் நிர்வாகம் ஒன்று அவர்கள் புதிதாக தயாரிக்க உள்ள படத்திற்கு இசையமைப்பாளராக குறளரசனை அறிமுகப்படுத்துகிறது. அதன்படி, குறளரசன் இசை அமைப்பில் உருவாகி இருக்கும் நான்கு பாடல்களும், பிரம்மாண்டமான விழாவில் வெளியாகவுள்ளது.-source: eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!