எம்.பி.க்களிடம் குதிரைப் பேரம் பேசிய ராஜபக்சே .. இலங்கை அதிபர் திடுக் தகவல்..!

ahintha

இலங்கை நாடாளுமன்றத்தில், பெரும்பான்மையை நிரூபிக்க, மகிந்தா ராஜபக்சே, எம்பிக்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என்று அந்நாட்டு அதிபர் மைதிரிபால சிறிசேனா குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை, அதிபர் சிறிசேனா திடீரென பதவி நீக்கம் செய்துவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமர் என அதிபர் சிறிசேனா அறிவித்தார்.

இதையடுத்து, விக்ரமசிங்கே, தான்தான் பிரதமராக தொடருவதாக அறிவித்தார். இதையடுத்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் வெற்றி பெறுவதற்காக பல எம்பிக்களையும் ராஜபக்சே அணுகி ஆதரவு கேட்டார்.

இருப்பினும், நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்சே தோற்றார். இந்த நிலையில், அதிபர் சிறிசேனா அந்த நாட்டு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

ராஜபக்சே கூறுகையில், பெரும்பான்மையை நிருபிக்க, 113 எம்பிக்கள் ஆதரவு தேவை. எனவே தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவர் தோல்வி அடைந்தார். எம்பிக்கள், அளவுக்கு அதிகமாக லஞ்சம் கேட்டதுதான், ராஜபக்சேவின் தோல்விக்கு காரணம்.

சில எம்பிக்கள் ரூ.50 கோடி வரை கேட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. பணம் இருந்திருந்தால் ராஜபக்சே வெற்றி பெற்று இருப்பார். ராஜபக்சே வெற்றி பெற்று இருந்தால், இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சிக்கல் நீடித்து இருக்காது. இவ்வாறு சிறிசேனா கூறியுள்ளார். இந்த கருத்து இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!