ஆன்லைன் உணவுப் பிரியர்களே இந்த வீடியோவை மறக்காம பாருங்கள்..!

வாடிக்கையாளர் உணவை திருடி சாப்பிடும் வாட்ஸ்அப் மூலம் பரவி வரும் வீடியோவில் உள்ள சொமொட்டோ பணியாளரை நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.

சமீபகாலங்களாக வீடுகளில் உணவு சமைக்கும் பழக்கம் நின்று போய் உணவு விடுதிகளில் சென்று சாப்பிடுவதை பலர் வழக்கமாகிக் கொண்டன்ர். அதுவும் மாறி தற்போது ஸ்விக்கி, சொமோட்டொ போன்ற செயலிகள் மூலம் வீட்டில் இருந்தபடியே உணவை ஆர்டர் செய்வது சகஜமாகி உள்ளது. அவ்வாறு ஆர்டர் செய்யப்படும் உணவுகளை சொமொட்டோ மற்றும் ஸ்விக்கி பணியாளர்கள் வீட்டுக்கே கொண்டு வந்து வழங்குகின்றனர்.

இந்நிலையில் சமூக வலை தளங்களில் நேற்று முதல் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு சிகப்பு சீருடை அணிந்த நபர் தனது பையில் வாடிக்கையாளர்களுக்காக எடுத்துச் செல்லும் உணவுப் பாக்கெட்டுக்கள் ஒவ்வொன்றில் இருந்தும் சிறிது எடுத்து சாப்பிட்டு விட்டு மீதம் உள்ள உணவை சீலிட்டு தனது பையில் வைக்கின்றார்.

இந்த வீடியோ மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. பலரும் இந்த வீடியோவில் உள்ள ஊழியர் குறித்து கண்டனம் தெரிவித்தனர். அதை ஒட்டி சொமோட்டோ நிறுவனம் அந்த வீடியோ குறித்து நடவடிக்கை எடுத்தது. விசாரனையில் அந்த ஊழியர் சொமோட்டோவில் மதுரை நகரில் பணி புரிபவர் என கண்டறியப்பட்டது. இது குறித்து சொமோட்டோ நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ‘அந்த வீடியோவில் வரும் ஊழியர் எங்கள் நிறுவனத்தை சேர்ந்தவர். மதுரையில் பணி புரிகிறார். இது போல நடப்பது மிகவும் அபூர்வமான ஒன்றாகும். இவ்வாறு வாடிக்கையாளர்களின் உணவை திருடுவது மிகவும் தவறான ஒரு விஷயமாகும். இது குறித்து நாங்கள் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அந்த வீடியோவில் வரும் ஊழியரிடம் நாங்கள் இந்த தவறு குறித்து விசாரணை நடத்தி இந்த தவறை அவர் மீண்டும் செய்யக்கூடாது என வலியுறுத்தி உளோம். அத்துடன் அவரை நங்கள் பணி நீக்கம் செய்துள்ளோம். இவ்வாறு வேறு யாரும் செய்யாமல் இருக்க நாங்கள் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். ‘ என தெரிவிக்கப்பட்டுள்ளது.-source: patrikai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!