நிஜத்திலும் விந்தணு தானம் செய்து ரசிகர்களை குஷிப்படுத்திய பாலிவுட் நடிகர்..!


பாடகரும், பாலிவுட் நடிகருமான ஆயூஷ்மான் குர்ரானா, தனது நிஜ வாழ்விலும் விந்தணு தானம் செய்துள்ளதாக கூறியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பாலிவுட்டின் பிரபல பாடகரான ஆயூஷ்மான் குர்ரானா, கடந்த 2012ம் ஆண்டு பாலிவுட் இயக்குநர் சூஜித் சிர்கார் இயக்கத்தில் வெளிவந்த ‘விக்கி டோனார்’ என்ற படத்தில் நடிகராக அறிமுகமானர். அவர் அந்த படத்தில் விந்தணு தானம் செய்யும் நபராக நடித்திருந்தார். மேலும் இதுபோன்ற போல்டான கதாபாத்திரத்தை அறிமுக படத்திலேயே ஏற்று நடித்திருந்த அவருக்கு பாராட்டுகள் குவிந்தன.

ரொமாண்டிக் காமெடி படமாக அந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றதோடு தேசிய விருதையும் பெற்றது.

இந்நிலையில், தனியார் தொலைகாட்சியில், ஹிந்த நடிகர், இயக்குநர் கரண் ஜோகரால் நடத்தப்படும், ‘காப்பி வித் கரண் ஜோகர்’ என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் ஆயுஷ்மான்.

அப்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஆயூஷ்மான், தான் நிஜ வாழ்விலும் விந்தணு தானம் செய்தது பற்றி இயக்குநர் சூஜித் குர்ரானாவிடம் தெரிவித்தபோது அதிர்ச்சியான அவர், இருக்கையில் இருந்து கீழே விழுந்ததாக கூறினார்.

மேலும் இதேபோன்று கேள்வி நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு நடிகரான விக்கியிடம் கேட்கப்பட்ட போது, அதை அவர் வருங்காலத்திற்காக சேமித்து வைத்துள்ளார் என்று ஆயூஷ்மான் குர்ரான அவரை கேலி செய்தார். இதன் புரொமோ விடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த நிகழ்ச்சியின் அடுத்த எபிசோடில், நடிகர்கள் ஆயூஷ்மான் மற்றும் விக்கி ஆகியோர் செய்த குறும்புகளை காண அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.-source: eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!