என்னால் மூச்சு விடமுடியவில்லை… கொலையாளிகளிடம் கசோகி இறுதியாக கெஞ்சிய ஆடியோ..!

Khashoggis
சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர் அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த அக்டோபர் 2-ம் தேதி சென்ற அவர் மாயமானார்.

அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வந்தது.

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்தார்.

இது ஒரு சர்வதேச கண்டனத்தை ஏற்படுத்தியதுடன் மேற்கு நாடுகளுடனான உறவுகளுக்கு சவுதி அரேபியாவுக்கு நெருக்கடி அளித்து உள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து வெளிவரும் சி.என்.என். செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கசோகி இறுதியாக, என்னால் மூச்சு விடமுடியவில்லை என கூறினார் என்று ஆடியோ டேப்பில் பேசிய தகவலை அடிப்படையாக கொண்டு தெரிவித்துள்ளது.

கசோகி கொலை செய்வது முன்பே திட்டமிடப்பட்டது என்பதும் மற்றும் பல்வேறு தொலைபேசி அழைப்புகள் வழியே கொலை செய்வதற்கான விவரங்கள் வழங்கப்பட்டன என்பதும் டேப்பின் வழியே தெளிவுடன் தெரிய வந்துள்ளது.

இந்த அழைப்புகள் ரியாத் நகரில் உள்ள முக்கிய அதிகாரிகளுக்கு விடப்பட்டு உள்ளன என துருக்கி அதிகாரிகள் நம்புகின்றனர் என்று சி.என்.என். தெரிவித்துள்ளது.

இந்த கொடிய விவரங்கள் அடங்கிய டேப்பில், கொலைகாரர்களிடம் கசோகி போராடும் பேச்சுகளும், அவரின் சப்தங்களும் பதிவாகியுள்ளன என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.-source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!