‘ஒக்கி’ புயலால் லட்சத்தீவுகளில் ரூ.500 கோடி சேதம்…!


லட்சத்தீவுகள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் முகமது பைசல் (தேசியவாத காங்கிரஸ்) கூறுகையில், “லட்சத்தீவுகளில் மினிகாய், கல்பேனி, கவரட்டி தீவுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.

அங்கு இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. 500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

மின்கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள் விழுந்துள்ளன. கவரட்டியில் கடல் தண்ணீரை குடிநீராக்கும் ஆலை பாதித்துள்ளது. மொத்தத்தில் ரூ.500 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது.

இங்கு இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு மத்திய அரசு உதவ வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். “விவசாயிகளுக்கு மழையாலும், சூறாவளி காற்றாலும் பெருத்த பயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். படகு போக்குவரத்து முடங்கிப்போய் உள்ளது. சுமார் 10 படகுகள் மூழ்கி உள்ளன” என்றும் அவர் கூறினார். – Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!