சனிபகவானை குளிர்விக்க சிறந்த பரிகாரம் குரங்குக்கு வாழைப்பழமா..?


சனீஸ்வரனைப் போல் கொடுப்பார் இல்லை. சகல சங்கடங்களையும் போக்கவேண்டும் என்று வேண்டி பிராயச்சித்தம் செய்தால், சனி பகவான் நன்மையே செய்வார்.

கோள் சார ரீதியாக சனிப் பெயர்ச்சி அவரவர் லக்னத்துக்கோ, ராசிக்கோ பாதகமான இடத்தில் சஞ்சரித்தாலும் அவரவர் ஜாதக ரீதியாக தசா புத்திகள் நன்றாக நடந்தால், பாதகப் பலன்கள் குறைவாகத்தான் இருக்கும். தசா புத்தி சரியாக இல்லாதவர்களுக்கு சற்று பாதக பலன்கள் ஏற்படலாம்.

ஆகவே பொதுவான பரிகாரமாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வது. தன்னை விட பொருளாதார ரீதியாக தாழ்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு உதவி செய்வது. வாரம் தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது. நள புராணம் வாசிப்பது, கேட்பது, சனீஸ்வர காயத்ரியை தினம் 108 முறை ஜபிப்பது. ஹனுமன் ஸ்லோகம் சொல்வது. வெளியில் சென்று வரும் போது காலை நன்கு கழுவிக் கொள்வது, குரங்குகளுக்கு வாழைப் பழம் வாங்கி தருவது ஆகியவை சனிபகவானைக் குளிரச்செய்யும் சிறந்த பரிகாரங்கள்.


பொதுவாக, ஜன்மச் சனி நடப்பவர்கள் திருக்கொள்ளிக்காடு, திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில், சுசீந்திரம் ஆஞ்சநேயர் கோயில் ஆகிய இடங்களுக்குச் சென்று ஜன்ம நட்சத்திர நாளில் வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

சனீஸ்வரனைப் போல் கொடுப்பார் இல்லை. கால புருஷனின் ஜீவனாதிபதி லாபாதிபதி ஆவார். சகல சங்கடங்களையும் போக்கவேண்டும் என்று வேண்டி பிராயச்சித்தம் செய்தால், சனி பகவான் நன்மையே செய்வார் என்று கூறினார்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!