ஆயுளையும் – செல்வத்தையும் அதிகரிக்க நவகிரகங்களை இப்படி வழிபடுங்க..!


இந்து மதத்தில் வானில் உள்ள 9 கிரகங்களும் நவகிரகங்களாக வணங்கப்படுகிறது. நமது வாழ்க்கையை தீர்மானிக்கும் ஜாதகங்கள் இந்த நவகிரகங்களின் நிலையை பொறுத்தே கணிக்கப்படுகிறது. இந்த கிரகங்கள் உங்கள் ஜாதகத்தில் இருக்கும் நிலையை பொறுத்தே உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றங்களும், இறக்கங்களும் இருக்குமென நம்பப்படுகிறது. நமது விதியை தீர்மானிப்பதில் இவற்றின் பங்கு மிகமுக்கியமானது.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகியவையே இந்த நவகிரகங்களாகும். இதில் 7 கிரகங்கள் வாரத்தில் உள்ள நாட்களை வைத்து பெயரிடப்படுகிறது. ராகு, கேது இரண்டும் தீயசக்திகளை நிர்வகிக்கும் இரண்டு முக்கிய கிரகங்களாக கருதப்படுகிறது.

அவற்றின் சுழற்சியை பொறுத்து உங்கள் வாழ்வின் நன்மைகளும், தீமைகளும் மாறி மாறி வருகிறது. சரியான இடத்தில் இருந்தால் இவை ஒரே இரவில் ராஜாவாக மாற்றிவிடும், தவறான இடத்தில் இருந்தால் ராஜாவையும் வறியவனாக மாற்றிவிடும். இந்த கிரகங்களுக்கு பிடித்த உணவை வைத்து வழிபடுவதன் மூலம் அவர்களின் ஆசீர்வாதத்தை பெறமுடியும்.

ஞாயிறு என்பது சூரியனின் நாளாக கருதப்படுகிறது. நெருப்பின் கடவுளான அவருக்கு பிடித்த நிறம் சிவப்பு ஆகும். அவருக்கு பிடித்த உணவுகள் வெல்லம், சிவப்பு பருப்புகள், குங்குமப்பூ, சந்தனம், கோதுமை மற்றும் சிவப்பு வண்ண பழங்களாகும். இந்த பொருட்களை வைத்து சூரியனை வழிபடுவது உங்களுக்கு நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கும்.

நிலா ஆனது திங்கள் கிழமையை குறிப்பதாகும். சந்திரனுக்கு வெள்ளை நிற பொருட்கள் அனைத்தும் பிடிக்கும். எனவே அரிசி, பால், தயிர், நெய், உப்பு, சர்க்கரை, முந்திரி, வெள்ளை இனிப்புகள் மற்றும் முள்ளங்கி போன்றவற்றை பிரசாதமாக படைக்கலாம். இதன்மூலம் உங்கள் வாழ்க்கையில் அமைதி நிலவும்.

செவ்வாய் கிரகத்திற்கான கிழமை செவ்வாய்தான். செவ்வாய் கிரகத்தின் கடவுளாக இருப்பவர் வாயுபுத்திரன் அனுமன். இவருக்கு மிகவும் பிடித்த பொருட்கள் சிவப்பு பருப்புகள், வெல்லம், மாதுளை மற்றும் அனைத்து சிவப்பு வண்ண பழங்கள். இரத்தம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் இது குணப்படுத்தும்.


புதன் கிரகம் மெர்குரி என்றும் அழைக்கப்படுகிறது. புதன் கிரகத்திற்கு பிடித்த நிறம் பச்சை ஆகும், எனவே பச்சை பருப்புகள், பச்சை நிற பழங்கள், பூசணிக்காய், பச்சை நிற இனிப்புகள் போன்றவற்றை வைத்து வழிபடுங்கள். இதனால் உங்கள் மனசிக்கல்கள் அனைத்தும் நீங்கும்.

பிரகஸ்பதி என்பவர் வியாழனின் கடவுளாவார். இவருக்கு பிடித்த நிறம் மஞ்சள் ஆகும். எனவே லட்டு, சுண்டல் மற்றும் மஞ்சள் நிற பழங்களை பிரசாதமாக வழங்கலாம். இதன் மூலம் அனைத்து சிறுநீரக கோளாறுகள் குணமாவதுடன் நோயில்லா வாழ்வை வாழலாம்.

சுக்ரன் கிரகத்தின் நாளாக வெள்ளிக்கிழமை கணக்கிடப்படுகிறது. சுக்ரவார் அனைத்து ஆவிகளின் கடவுளாகவும், செல்வத்தின் அதிபதியாகவும் இருக்கிறார். இவருக்கு வெள்ளை நிற பொருட்களை வைத்து வழிபடுவது நல்ல பலனை அளிக்கும். எனவே அரிசி, சர்க்கரை, ரவை மற்றும் வெள்ளை நிற பழங்கள் போன்றவற்றை வைத்து வழிபடலாம். இவர் தன்னை வழிபடுபவர்களின் அனைத்து பணக்கஷ்டங்களையும் போக்கும்.

அனைவரும் பயப்படும் ஒரு கிரகம் என்றால் அது சனிதான். அவர் விரும்புவது கருப்பு நிறத்தைதான். இவருக்கு கருப்பு உளுந்து, கடுகு எண்ணெய், கருப்பு எள், கருப்பு சுண்டல், கருப்பு பழங்கள் போன்றவற்றை படைக்கலாம். இது உங்களின் எதிரிகளை ஜெயிக்கவும், அவர்களை அழிக்கவும் உதவுவார். அனைத்து விதமான ஆரோக்கிய கேடுகளை குணமாக்குவார். இவரின் கருணைப்பார்வையை பெறவேண்டியது உங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.

ராகு- கேது என்பவர்கள் சந்திரனின் ஏறுமுனை மற்றும் இறங்குமுனையை குறிக்கும். நவகிரகங்களில் ராகு – கேது இரண்டும் நிழல் கிரகங்களாக கருதப்படுகிறது. அதாவது ஒருவர் எங்கு சென்றாலும் மற்றொருவரும் கூடவே செல்வார்கள். அவர்கள் இருவரும் ஒன்றாக நகரக்கூடியவர்கள். இவர்கள் கருப்பு நிறத்தை விரும்புபவர்கள். எனவே கருப்பு எள், கருப்பு பழங்கள் மற்றும் பூக்கள், இனிப்புகள் போன்றவற்றை வைத்து வழிபடலாம். இவர்களை வழிபடுவது ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் வழங்கும்.-source: boldsky

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!