ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கவாஜா சகோதரர் அதிரடி கைது… பின்ணனியில் திடுக் தகவல்..!


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா. பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர். சமீபத்தில் இந்தியாவில் நடந்த கிரிக்கெட் தொடரில் கலந்து கொண்டு விளையாடினார். காயம் காரணமாக பாதியிலேயே நாடு திரும்பினார்.

கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போது இந்தியா தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இவரது சகோதரர் அர்சகான் கவாஜா (39). சமீபத்தில் இவர் சிட்னி புறநகர் பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் தீவிரவாத தடுப்பு போலீசாரால் ஒரு ஆவணம் கைப்பற்றப்பட்டது.


அதில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருந்ததும் தாக்குதல் நடத்துபவர்களின் பட்டியலில் முன்னாள் பிரதமர் பெயரும் இடம்பெற்றிருந்தது. அந்த ஆவணம் அர்சகான் கவாஜா உடன் படிக்கும் முகமது கமெர் நிஷாம்தீன் எழுதியாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாணையில் நிஷாம்தீன் கையெழுத்து அந்த கடிதத்துடன் ஒத்துப்போகவில்லை என்பதை அறிந்த போலீசார் அவரை எந்தவித வழக்கும் இல்லாமல் விடுவித்தனர்.

இந்நிலையில் ஒரு பெண் விவகாரத்தில் அர்சகான் கவாஜா அந்த கடிதத்தை எழுதியதாக தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!