முடியின் வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் இயற்கை வைத்தியம்..!


சூரியக் கதிர்கள் அதிகளவில் முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்கிறது. அதிக நேரம் வெயிலில் இருப்பதனால் முடியின் நிறம் மாற்றம் அடைதல் நுனிப் பகுதி வெடித்தல், உலர்ந்து போதல் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகிறதி. முடியில் அதிக அக்கறை காட்டவில்லையென்றால் பாதிப்புக்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதற்காக் அழகு நிலையங்களிற்கு சென்று சிகிச்சை எடுப்பதை விடுத்து வீட்டில் இயற்கை முறியில் தீர்வைப் பெற்றுக் கொள்வது சிறந்தது.

சூரியக் கதிர்களால் பாதிக்கப்பட்ட முடிகளை சரி செய்வதற்கான வழிகள் சில:

1. தேங்காய் எண்ணெய்யும் பிளக் டீ:
பயன்படுத்தும் முறை:
1 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய்யும், உடன் எடுக்கப்பட்ட பிளக் டீ சாயத்தையும் கலந்து கொள்ளவும். அதனை தலை முழுவதும் தடவி மசாஜ் செய்து கொள்ளவும். 40 நிமிடங்களின் பின் நீர் மற்றும் சம்போ பயன்படுத்தி கழுவவும்.

அனுகூலம்:
இதனை பயன்படுத்துவதனால் பாதிப்படைந்த முடியில் இருந்து தீர்வைப் பெற முடியும்.

2. தேயிலை மர எண்ணெய்யும் கற்றாளைச் சாறும்.
பயன்படுத்தும் முறை:
2 மேசைக்கரண்டி கற்றாளைச் சாற்றுடன் 3-4 துளிகள் தேயிலை மர எண்ணெய்யை கலந்து தலையில் தடவவும். 1 மணி நேரத்தின் பின் சம்போ பயன்படுத்திக் குளிக்கவும்.

அனுகூலம்:
இதனைப் பயன்படுத்துவதனால் பக்டீரியாத் தொற்றுக்களில் இருந்தும் சூரியக் கதிர்களின் பாதிப்பிலிருந்தும் தீர்வைப் பெற முடியும்.

3. விட்டமின் ஈ எண்ணெய்யும் முட்டை வெள்ளைக் கருவும்.
பயன்படுத்தும் முறை:
விட்டமின் ஈ கப்ஸ்யூலை வெட்டி அந்த எண்ணெய்யுடன் முட்டை வெள்ளைக் கருவை கலந்து தலையில் தடவவும். 1 மணி நேரத்தின் பின் சம்போ பயன்படுத்தி குளிக்கவும்.


அனுகூலம்:
இவை தலைப் பகுதியில் உள்ள நச்சுக்களை விரட்டி ஆரோக்கியத்தை வழங்குகின்றது.

4. பாதாம் எண்ணெய்யும் அவகோடாவும்

பயன்படுத்தும் முறை:
அவகோடாவை மசித்தி அதில் ஒரு மேசைக்கரண்இ பாதம் எண்ணெய்யைக் கலந்து கொள்ளவும். அதனை தலை முழுவதும் தடவி 40 நிமிடங்களின் பின் சம்போ மற்றும் நீரைப் பயன்படுத்தி குளிக்கவும்.

அனுகூலம்:
இவை முடிகளற்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்கி, முடியின் வேர்ப்பகுதிகளை வலிமையாக்கும்.

5. ஆர்கன் எண்ணெய்யும் மயோனைஸ்
பயன்படுத்தும் முறை:
1 மேசைக்கரண்டி மயோனைஸ், 1 தேக்கரண்டி ஆர்கன் எண்ணெய்யைக் கலந்து அதனை தலை முழுவதும் தடவி மசாஜ் செய்து கொள்ளவும். 30 நிமிடங்களின் பின் நீர், சம்போ பயன்படுத்திக் கழுவவும்.

அனுகூலம்:
இதில் காணப்படும் புரோட்டின் பாதிப்படைந்த முடியின் கட்டமைப்பை மீட்டுத் தரும்.

6. வெங்காயச் சாறும் நெல்லிக்காயும்.
பயன்படுத்தும் முறை:
1 தேக்கரண்டி வெங்காயச் சாறு 2 மேசைக்கரண்டி நெல்லிக்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். அதனை தலை முழுவதும் தடவி விரல் நுனிகளால் சில நிமிடங்கள் மசாஜ் செய்து கொள்ளவும். பின்பு சம்போவால் தலையைக் கழுவவும்.

அனுகூலம்:
வெங்காயம், நெல்லிக்காய் சூரியக் கதிர்களினால் ஏற்படும் பாதிப்பை முற்றாக அழித்து விடும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!