வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற சாய்பாபா கூறும் இந்த 5 வழிகளை பின்பற்றுங்கள்..!


இந்தியா பல்வேறு மொழிகளையும், கலாச்சாரங்களையும் கொண்டுள்ளது. ” வேற்றுமையில் ஒற்றுமை ” என்னும் கூற்றுக்கேற்ப பல மதங்கள் இருந்தாலும் பெரும்பாலான இந்தியர்கள் இங்கு சகோதர உணர்வுடன்தான் வாழ்ந்து வருகிறார்கள். அதுதான் இந்தியாவின் தனிச்சிறப்பே. ஒரு மதக்கடவுளை வணங்க மற்ற மதத்தினர் ஒருபோதும் தயங்குவதில்லை. அப்படி அனைத்து மதத்தினரும் வேறுபாடின்றி வணங்கும் ஒரு கடவுள்தான் ஷிரிடி சாய்பாபா ஆவார்.

அனைத்து நாட்களிலும் சாய்பாபாவை வணங்குவது சிறப்பானதாக இருந்தாலும் வியாழக்கிழமை வணங்குவது என்பது கூடுதல் சிறப்பானது. அந்த நாளில் அவருக்கு பிடித்தவற்றை படைத்து அவருக்கு பிடித்த முறையில் வழிபட்டால் உங்கள் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். இந்த பதிவில் ஷிரிடி சாய்பாபா வாழ்க்கையை பற்றி கூறிய முக்கியமான 5 பாடங்கள் என்ன என்பதையும் வியாழக்கிழமை அவரை எப்படி வணங்கவேண்டும் என்பதையும் பார்க்கலாம்.

பசிக்கு உணவளி
” பசியில் வாடுபவர்களுக்கு உணவளித்து விட்டு அதன்பின் உங்களுக்காக சாப்பிடுங்கள் “. எப்பொழுதும் மற்றவர்களுக்கு எதுவும் கொடுக்காமல் சாப்பிடுவது என்பது பாவசெயலாகும். பசியில் வாடும் மனிதர்களுக்கோ, மிருகங்களுக்கோ உணவளிப்பது கடவுளுக்கு படைப்பதை காட்டிலும் சிறந்தது. முடிந்தளவு வியாழக்கிழமையாவது பசியில் வாடும் யாருக்காவது உணவலிக்க முயலுங்கள்.


வெளிப்புற அழகை பார்க்காதீர்கள்

ஒருவரின் வெளிப்புற தோற்றம் அழகாக இருப்பதையோ அல்லது அசிங்கமாக இருபத்தையோ நினைத்து கவலைப்படாதீர்கள். அனைவருக்குள்ளும் கடவுள் வாழ்கிறார். அனைவருக்குள்ளும் இருக்கும் தெய்வீக சக்தியை உணருங்கள்.

உங்களிடம் உதவி கேட்டு வரும் எவரிடமும் ” இல்லை ” என்று சொல்லாதீரக்ள்

” ரூனா – அனுபந்த இன்றி யாரும் உங்களிடம் வருவதில்லை “. ரூனா அனுபந்த என்றால் முந்தைய ஜென்மத்தில் இருந்து தொடரும் பிணைப்பு என்று பொருள். யாராவது உங்களிடம் உதவி என கேட்டு வந்தால் உங்களால் என்ன முடியுமோ அதனை நிச்சயம் செய்யுங்கள். ஒருபோதும் ” இல்லை ” என்று சொல்லிவிடாதீர்கள். ஒருவேளை உங்களிடம் கொடுக்க இதுவும் இல்லை என்றால் அவர்களிடம் அமைதியாக உங்கள் நிலையை எடுத்துக்கூறுங்கள். மரியாதைக்குறைவான செயல்களை ஒருபோதும் செய்யாதீர்கள்.


மாயா

இந்த உலகத்தில் அனைத்தும் மாயாவால் நிர்வகிக்கப்படுகிறது. நம்முடைய வீழ்ச்சி, தோல்வி, பலவீனம், வெற்றி என அனைத்துமே தாற்காலிகமானதுதான். இந்த உண்மையை எப்போதும் மறந்துவிடாதீர்கள்.

பேராசை கொள்ளாதீர்கள்

மனிதனை அழிக்கும் கொடிய குணங்களில் ஒரு பேராசை. ” பேராசையும் பரம்பொருளும் எப்பொழுதுமே ஒன்றுக்கொன்று எதிரானவைதான் “. தன்னிடம் என்ன இருக்கிறதோ அதனை வைத்த மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். பேராசை உள்ள மனிதன் ஒருபோதும் அமைதியாக வாழ முடியாது. வியாழக்கிழமையன்று சாய்பாபாவை ஏன்டா பொருட்கள் கொண்டு வழிபட வேண்டும் என்று கீழே பார்க்கலாம்.

கீரை

மற்ற கடவுள்களை போல அல்லாமல் சாய்பாபா கீரையை மிகவும் விரும்பக்கூடியவர். சொல்லப்போனால் சாய்பாபாவிற்கு மிகவும் பிடித்த காயென்றால் அது கீரைதான் என்று குறிப்புகள் கூறுகிறது. எனவே வியாழக்கிழமையன்று சாய்பாபாவிற்கு கீரை வைத்து வழிபடுவது அவரின் அருளை பூரணமாக பெற்றுத்தரும்.

இனிப்புகள்

சாய்பாபா எப்பொழுதும் குழந்தைகளை விரும்புபவர் ஆவார். சொல்லபோனால் சாய்பாபாவை குழந்தைகளின் பாதுகாவலர் என்று கூட கூறலாம். குழந்தைகளுக்கு எப்படி இனிப்புகள் பிடிக்குமோ அதேபோல சாய்பாபாவிற்கும் இனிப்புகள் மிகவும் பிடிக்கும். எனவே அவருக்கு இனிப்புகள் வைத்து வழிபடுவது உங்களுக்கு சிறப்பான பலன்களை வழங்கும். குறிப்பாக வெள்ளை நிற இனிப்புகள் சாய்பாபாவிற்கு மிகவும் பிடித்தவையாகும்.


பூக்கள்

அனைத்து கடவுள்களையும் போலவே சாய்பாபாவிற்கும் பூக்களை வைத்து வணங்கலாம். ஆனால் அது அவருக்கு பிடித்த சிவப்பு வண்ண மலர்களாக இருந்தால் கூடுதல் சிறப்பாகும்.

பழங்கள்

பழங்களை பொறுத்தவரையில் நீங்கள் எந்த பழத்தை வேண்டுமென்றாலும் சாய்பாபாவிற்கு வைத்து வழிபடலாம். ஆனால் அவற்றுடன் தேங்காயை சேர்த்து வைத்தும் வழிபடுங்கள்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!