ஒரே மாதத்தில் அழகிய புருவத்தை பெற வேண்டுமா..? இப்படி செய்யுங்க..!


அழகிய அடர்த்தியான புருவங்கள் இருப்பதனால் முகத்தின் அழகு மேலும் அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பல்ருக்கு புருவ சரியான வளர்ச்சி அடைவதில்லை. இதற்கு காரணம் பிளக்கிங், திரட்னிங், வக்ஸிங் செய்யும் போது அதிகமாக செய்வதனால் முடியின் அடர்த்தி குறைவடைகிறது.

முடி வளர்ச்சிக்காக பல சிகிச்சை முறைகள் இருந்தாலும் அவற்றில் பக்க விளைவுகளும் காணப்படுகிறது. இதனால் வீட்டில் இயற்கை முறையை பயன்படுத்துவதனால் நிரந்தரமான தீர்வைப் பெறலாம்.

அழகிய புருவங்களைப் பெறுவதற்கு இயற்கை முறையில் இதனைப் பயன்படுத்துங்கள்.

1. தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய்யை புருவங்களில் தடவுவதனால் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன், முடியின் வேர்ப்பகுதிகளை வலிமையாக்கும். இதில் உள்ள விட்டமின் ஈ மற்றும் இரும்புச் சத்து புருவங்களின் வளர்ச்சிக்கு உதவும்.

2. ஒலிவ் எண்ணெய்:
தினமும் தூங்குவதற்கு முன் ஒலிவ் எண்ணெய்யை புருவங்களில் தடவி மறுநாள் காலையில் நீரினால் கழுவவும். இதனை தொடர்ந்து செய்வதனால் அடர்த்தியான் அழகிய புருவங்கள் கிடைக்கும்.

3. வெங்காயச் சாறு:
சமையலுக்கு பயன்படுத்தும் வெங்காயம் முடி வளர்ச்சிக்கு அதிகளவில் உதவுகிறது. வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி அதன் சாற்றை எடுத்துக் கொள்ளவும். அதனை தினமும் புருவங்களின் மீது தடவி 10 நிமிடங்களில் நீரினால் கழுவவும்.


4. முட்டை மஞ்சள்க் கரு:
முட்டை மஞ்சள் கரு பழைய முறையாக இருந்தாலும் இது விரைவான தீர்வைத் தரக் கூடியது. முட்டையில் இருந்து மஞ்சள் கருவை தனியாக பிரித்தெடுத்து அதனை புருவங்கள் மீது தடவி 20 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். இதனை வாரத்திற்கு 3 தடவைகளாவது செய்ய வேண்டும்.

5. வெந்தயம்:
இரவில் வெந்தயத்தை ஊற வைத்து, மறுநாள் அதனை அரைத்து பசையாக எடுத்துக் கொள்ளவும். அதனை புருவங்களின் மீது தடவி 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவி வருவதனால் அடர்த்தியான் ஆரோக்கியமான புருவத்தைப் பெற முடியும்.

6. பெட்ரோலியம் ஜெலி:
பெட்ரோலியம் ஜெலி விரைவான தீர்வை பெற்றுத் தருகிறது. இதனை தினமும் தூங்குவ்அதற்கு முன் புருவங்களில் தடவி மறுநாள் காலையில் நீரினால் கழுவினால் சில நாட்களில் புருவங்கள் அடர்த்தியாவதை பார்க்க முடியும்.

7. கற்றாளைச் சாறு:
ஆரோக்கியமான அடர்த்தியான புருவங்கள் வளர்வதற்கு கற்றாளைச் சாறு உதவுகிறது. உடன் பறிக்கப்பட்ட கற்றாளை இலையினை வெட்டி கற்றாளைச் சாற்றை எடுத்து புருவங்களின் மீது தடவி 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். அல்லது கடைகளில் கிடைக்கும் கற்றாளைச் சாற்றையும் வாங்கிப் பயன்படுத்தலாம்.

8. பால்:
பாலில் உள்ள புரோட்டின் முடி வளர்ச்சிக்கு உதவும். இதில் உள்ள கல்சியம் புருவங்களின் வளர்ச்சிக்கு உதவும். தினமும் மூன்று தடவைகளாவது பஞ்சினை பாலில் நனைத்து புருவங்களில் தடவி 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!