உனக்கு பிடிக்கலையா நீ சாப்பிடாதே.. விட்டுட்டு போ.. கொழுப்பா.. திமிரா.. அதிர வைக்கும் சாமியார்!


மாட்டு கறி சாப்பிடுவது குறித்து ஒருவர் கேட்ட கேள்விக்கு ஒரு சாமியார் போட்ட போடு இருக்கே? அதை கொஞ்சம் பாருங்க!

ஆசிரம் ஒன்றில் சாமியார் தன் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். கீழே தரையில் ஜமுக்காளத்தில் அவரது பக்தர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்.

இப்போது கூட்டத்திலிருந்த ஒருவர் தன் சந்தேகத்தை கேட்கிறார், “ஐயா.. நான்-வெஜ் சாப்பிடுவது அவங்கவங்க மனசை பொறுத்தது-ன்னு சொல்றீங்க. ஆனா ஒரு கோழியோ, ஆட்இயை பிடித்து அறுக்கும்போது அவைகளுக்கு வலிக்குது இல்லை. “? என்று சொல்கிறார். அதற்கு ஐயா சொன்ன விளக்கம்தான் இது:

“அதைவிட அறுக்கறவங்களுக்கு எவ்வளோ வலிக்கும்? ஒரு மாட்டை அறுக்கிறது எவ்வளோ பெரிய கஷ்டம் தெரியுமா? அந்த மாடு இவ்ளோ பெரிசா இருக்கு!! அதை ரெண்டு பக்கமும் பிடிச்சிக்கிட்டு, கழுத்தை பிடிச்சு அறுத்துட்டு, அதன் தோலை அழகா உரிச்சி… என்னா வேலை தெரியுமா அது? வேர்த்து விறுவிறுத்துடும். யானேயே அறுத்து சாப்பிடறாங்க தெரியுமா?” என்றார்.

உடனே அந்த பக்தர், “இல்லை ஐயா.. அப்படி கொன்னு சாப்பிடும்போது மனசு வலிக்குது” என்று சொல்கிறார். அதற்கு சாமியார், “அது உங்க பிரச்சனை, என்கிட்ட ஏன் அதை சொல்றே? உனக்கு பிடிக்கலையா நீ சாப்பிடாதே.. விட்டுட்டு போ.. பசிக்கிறவனுக்குதான் சாப்பாட்டு அருமை தெரியும். உனக்கு என்ன திமிரா? துட்டு கொழுப்பா உனக்கு?

பரம்பரை பரம்பரையா நீ சாப்பிடலைன்னா அது என் பிரச்சனையா? கோழிக்கும் ஆட்டுக்கும், மாட்டுக்கும் இரக்கப்படறியே, மனுஷங்களுக்கு யாருடா இரக்கப்படறது? அதுங்க மேல உனக்கு இரக்கமா? உனக்கு மட்டும் இல்லை, இது மாதிரி கேட்கறவங்களுக்கு உரைக்கணும்னுதான் பதில் சொல்லிட்டு இருக்கேன். இதன்மூலமா 10 பேரை திட்டலாம் இல்லை?

நீ பசியில பிச்சையெடுக்க போனா, உனக்கு நாத்தம் பிடிச்ச மீனை உன் தட்டுல போட்டா என்னய்யா செய்வே? எனக்கு அது கிடைச்சிருந்தா, ‘இறைவா இந்த மீனு கிடைச்சதுக்கு நன்றி’ன்னு சொல்லுவேன். எனக்கும் கடவுள் இருக்காரு. எனக்கு மீன் கிடைச்சது சாப்பிடறேன், இதுக்கு உயிர் இருக்கு, வலி இருக்கு”ன்னு வந்து சொல்றே?

அதனால பொதுவா சொல்றேன், உங்களுக்கு பிடிக்கலையா… யாரும் சாப்பிடாதீங்க. ஏன் கறி சாப்பிடலைன்னு உங்கள வந்து நாங்க கேட்டோமோ? “சார்.. நீங்க ஏன் தயிர் சாதம் சாப்பிடறீங்க?”ன்னு இதுவரைக்கும் யாரையாவது நாம் கேட்டோமா?-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!