புவனேஸ்வரில் மாதுரி ஆட… ரகுமான் பாட…கோலாகலமாக துவங்கிய உலககோப்பை ஹாக்கி!


ஆண்களுக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடர், பாலிவுட் பிரபலங்களின் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது.

ஆண்களுக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இன்று (நவம்பர் 28) தொடங்கி டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த தொடரில் இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. இந்த நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நேற்று (நவம்பர் 27 ) இந்த உலகக் கோப்பை தொடரின் துவக்க விழா நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில், உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க வந்திருந்த பல்வேறு அணிகளின் கேப்டன்களை பாலிவுட் பிரபலம் ஷாருக்கான் மற்றும் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் கூட்டாக வரவேற்றனர்.

விழாவில் பேசிய ஷாருக், ஹாக்கி விளையாட்டானது பல்வேறு உணர்ச்சிகளின் கலவை என்று கூறி நெகிழ்ந்தார்.

பின்னர் மாதுரி தீட்சித்தின் சிறப்பு நடனம் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சிகளுடன் துவக்க விழா நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

இந்நிலையில், இன்று நடைபெறும் துவக்க ஆட்டத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது.-SOURCE : eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!