தமிழகத்தில் ஒகி எல்லாம் ஜுஜுபி… அடுத்த இரு நாளில் புரட்டி போட போகும் நிகழ்வு!


இந்த வருடத்தின் முதல் புயலாக உருவாகியிருக்கிறது ஓகி புயல். இந்த புயலே இன்னும் முழுவதுவாக முடியாமலிருக்கும் நிலையில் அடுத்த புயலுக்கான அறிவிப்புகள் தற்போது வெளியாகிவிட்டது.

தற்போது உருவாகியிருக்கும் இந்த ஓகி புயல் கன்னியாகுமரி பகுதியில் இருக்கிறது. இது எப்போது வேண்டுமானாலும் அரபிக் கடல் நோக்கி நகரலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை எப்போது வேண்டுமானாலும் புயலாக மாறலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து பல்வேறு அதிர்ச்சியுட்ட கூடிய தகவல்களும் வெளியாகியிருக்கிறது.

இந்த ஆண்டு மழை காலத்தின் முதல் புயல் என்ற சிறப்பு பெயருடன் கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்க தொடங்கி இருக்கிறது ஓகி புயல்.

தற்போது இந்த புயலானது கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்திற்கு இடையில் இருக்கிறது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்கள் அனைத்திற்கும் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் தற்போதைய நிலவரப்படி 70 கிமீ வேகத்தில் மோசமாக காற்று வீசிக் கொண்டு இருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!


இந்த புயலை கொஞ்சம் எளிதாகவே சமாளித்துவிடாமல் என்றுதான் அனைத்து வானிலை ஆய்வு மையங்களும் கணித்து இருக்கிறது. தற்போது இந்த ஓகி புயலானது கொஞ்சம் கொஞ்சமாக வலுவாகிக் கொண்டே வருகிறது.

மேலும் இது அரபிக்கடலை நோக்கி சென்று தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது தமிழ்நாட்டில் எங்குமே கரையை கடக்காது என்றும், எனவே இந்த புயல் குறித்து அதிக அச்சப்பட தேவையில்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஓகி புயல் சரியாக நாளை மதியம் தனது வீரியத்தை இழக்க வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் அந்த புயல் முடிந்து 2 நாள் இடைவெளியில் டிசம்பர் 3 ம் தேதி அடுத்த புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளது.


இதை பற்றி சரியாக சொல்ல வேண்டும் என்றால் இதுதான் ஓகி புயலைவிட மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியிருக்கிறார்கள். சென்னையில் 2 வாரத்திற்கு முன் கன மழை பெய்த போதே இந்த புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போதுதான் இந்த புயலுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு இருக்கிறது. அந்தமான் கடல் பகுதிக்கு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலையானது இன்று காலை உருவானது. தற்போது வரை இதில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் டிசம்பர் 3ம் தேதிக்கு பிறகு இது கொஞ்சம் கொஞ்சமாக வலுவாக வாய்ப்புள்ளது. தொடக்கத்தில் இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. அதன்பின்பு புயல் சின்னமாக மாறும். இது மட்டும் புயல் சின்னமாக மாறினால் கண்டிப்பாக தமிழ்நாட்டு கடல் பகுதியில்தான் கரையை கடக்கும்.

Source: seithipunal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!