முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீட்டையும் விட்டு வைக்காத கஜா புயல்..!


தமிழகத்தை மிரட்டி வந்த கஜா புயல் கடந்த 16-ந்தேதி அதிகாலை நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரை கடந்தது. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

புயலால் மரங்கள், மின்கம்பங்கள், வீடுகள், டவர்கள் கீழே விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. கஜா புயல் வந்து சென்ற பின்னரும் இன்னும் டெல்டா பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.

இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த வீடும் தப்பவில்லை. நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள கருணாநிதி பிறந்த வீடு நினைவு இல்லமாகவும், நூலகமாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கஜா புயலால் இந்த வீட்டின் முன்பகுதியில் இருந்த மரம் விழுந்து ஓடுகள் உடைந்தன. முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையும் சேதம் அடைந்துள்ளன. இது தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.-source : dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!