ஏழே நாட்களில் பளபளப்பான சருமம் வேண்டுமா..? தினமும் இப்படி செய்தாலே போதும்..!


பளபளப்பான மிருதுவான சருமத்தைப் பெறுவதில் யாருக்குத் தான் ஆசை இல்லை. ஆனால் சூழல் காரணிகள், மாசு, UV கதிர்களின் பாதிப்பு, ஆரோக்கியமற்ற வாழ்கை முறை, ஊட்டச்சத்தற்ற உணவுகள் போன்றவற்றால் தான் சருமம் தினந்தோறும் பாதிப்படையச் செய்கின்றது.

பாதிப்படைந்த சருமத்தை சரி செய்வதற்கு இரசாயணச் சிகிச்சை முறைகளை தேர்ந்தெடுத்தால் அவை மேலும் சருமத்தைப் பாதிப்படையத் தான் செய்யும். ஆனால் அதற்குப் பதிலாக இயற்கை முறையில் சிகிச்சை அளிப்பதனால் பக்கவிளைவுகள் இன்றி மெனம்யான சருமத்தைப் பெற முடியும்.

1. அரிசி மாவும் பாலும்.
அரிசி மா சருமத்தில் உள்ள வீக்கங்களைக் குறைப்பதுடன், அதனை பளபளக்கச் செய்வதற்கு உதவும். பால் சருமத்திற்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குகின்றது.

தேவையானவை:
• 3 மேசைக்கரண்டி அரிசி மாவு.
• 2-3 மேசைக்கரண்டி பால்.

செய்முறை:
அரிசி மாவை பாத்திரம் ஒன்றில் எடுத்து அதில் பாலைக் கல்ந்து பசையாக தயாரித்துக் கொள்ளவும். அந்தப் பசையை முகத்தில் தடவி 30 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். வாரத்திற்கு 3 தடவைகளாவது இதனை செய்வது சிறந்தது.

2. உருளைக்கிழங்கு.
உருளைக்கிழங்கில் உள்ள அண்டிஒக்ஸிடன் சருமத்தை வெண்மையாக்கும். அத்துடன் சருமத்தில் உள்ள இறந்த கலங்களையும் நீக்கும்.

தேவையானவை:
• 1 உருளைக் கிழங்கு.

செய்முறை:
1 உருளைக் கிழங்கை சிறிதாக வெட்டி அதில் உள்ள சாற்றை எடுத்துக் கொள்ளவும். அதனை பஞ்சினால் முகத்தில் தடவி 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். நீரினால் கழுவிய பின் மொய்ஸ்டரைசர் பயன்படுத்துவது சிறந்தது. ஏனெனில் உருளைக்கிழங்கால் சருமம் உலர்வடைந்து விடும்.

இதனை வாரத்திற்கு 3 தடவைகள் செய்வது சிறந்தது.

3. சமையல் சோடா ஸ்கிறப்:
சமையல் சோடா சருமத்தில் உள்ள இறந்த கலங்கள் மற்றும் பக்டீரியாக்களை நீக்கி பளபளப்பையும் புத்துணர்ச்சியையும் பெற்றுத் தரும்.


தேவையானவை:
• 2 மேசைக்கரண்டி சமையல் சோடா.
• நீர்.

செய்முறை:
சமையல் சோடாவை நீரில் கலந்து முகத்தில் வட்ட வடிவில் ஸ்கிறப் செய்யவும். சிறிது நேரத்தின் பின் நீரினால் கழுவவும். பருக்கள் மற்றும் மென்மையான சருமத்தை உடையவர்கள் இந்த முறையைப் பின்பற்ற வேண்டாம்.

4. ஓட்ஸ்
ஓட்ஸ் இறந்த கலங்களை சருமத்தில் நீக்கி பளபளப்பையும் மென்மையையும் பெற்றுத் தரும்.

தேவையானவை:
• 3 மேசைக்கரண்டி ஓட்ஸ்.
• 2-3 மேசைக்கரண்டி றோஸ் வாட்டர்.

செய்முறை:
ஓட்ஸை பவுடராக்கி அதில் றோஸ் வாட்டர் சேர்த்து பசையாக தயாரித்துக் கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.
இதனை வாரத்திற்கு இரு தடவைகள் செய்வது சிறப்பானது.

5. தயிர்.
தயிர் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி அதனை பளபளப்பாகவும் மென்மையாகவும் மாற்றும்.

தேவையானவை:
• 2 மேசைக்கரண்டி தயிர்.
• 1 மேசைக்கரண்டி தேன்.

செய்முறை:
தயிரையும் தேனையும் கலந்து அதனௌ முகத்தில் தடவி 20 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். இதனை தினமும் செய்வதனால் சிறந்த தீர்வைப் பெற முடியும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!