சர்காரில் என் கேரக்டரை டம்மியாக்கிய ஏ.ஆர்.முருகதாஸ்’ – குமுறும் கீர்த்தி சுரேஷ்..!


‘நடிகையர் திலகம்’ தான் நான் நடித்த கடைசி சுயசரிதைப் படம். இனி என் வாழ்நாளில் யாருடைய சுயசரிதைக் கதைகளிலும் நடிப்பது இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்’எ ன்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

‘சர்கார்’ படத்தில் என் கேரக்டர் டம்மியாக அமைந்துவிட்டதற்கு எல்லோரும் கிண்டலடிக்கிறார்கள். படப்பிடிப்பு நடந்தபோதே இதை உணர்ந்திருக்கவே செய்தேன். இயக்குநர் முருகதாஸும் ஒரு கட்டத்தில் எனக்கு கதையில் வேலையே இல்லை என்பதைப்புரிந்துகொண்டு, என்னை சமாதானப்படுத்தி, ‘ஸாரிம்மா நான் ‘நடிகையர் திலகம்’ படம் பார்க்கலை. அடுத்த படத்துல உனக்கு பிரமாதமான கேரக்டர் குடுக்கிறேன் என்று பிராமிஸ் பண்ணியிருக்கிறார்.

இதே போல் ‘சண்டக்கோழி2’வும் என்னைக் கவிழ்த்துவிட்டது. அதன் முதல் பாகத்தில் மீரா ஜாஸ்மின் அதகளம் பண்ணியிருந்தார். அவரை ஜெயிக்க முடியாது என்று தெரிந்தும் ஏன் படத்தை ஒப்புக்கொண்டேன் என்று இன்றுவரை புரியவில்லை.

இந்தத் தோல்விகளால் நான் ஏதோ படங்கள் இல்லாமல் சும்மா இருப்பதைப்போல் உச்சுக்கொட்டுகிறார்கள். என்னை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய பிரியதர்ஷன் சார் இயக்கத்தில் ‘குஞ்சலி மார்க்கர்’ படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறேன். அடுத்து சுமார் 20 படங்களுக்கு கதைகேட்டுவருகிறேன்.

அந்த வரிசையில் என்.டி. ஆரின் சுயசரிதைப் படத்தில் அதே சாவித்திரி அம்மா பாத்திரத்தில் நடிக்க அழைப்பு வந்தது.கொஞ்சமும் யோசிக்காமல் மறுத்துவிட்டேன். ‘நடிகையர் திலகம்’ படம் தந்த அனுபவத்தில் சொல்கிறேன். இனி என் வாழ்நாளில் யாருடைய சுயசரிதைக் கதைகளிலும் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்’ என்கிறார் கீர்த்தி காரணம் எதுவும் சொல்லாமல்.-source: asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!